01/06/2026
News தமிழ்நாடு

காவல் நிலையத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொ*லை

  • August 6, 2025
  • 0

கோவை காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த நபர் தற்கொலை – அலட்சியமாக இருந்த அதிகாரிகள் இடமாற்றம் – மாநகர காவல் ஆணையர் உத்தரவு.. கோவை மாநகர பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து

காவல் நிலையத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொ*லை

கோவை காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த நபர் தற்கொலை – அலட்சியமாக இருந்த அதிகாரிகள் இடமாற்றம் – மாநகர காவல் ஆணையர் உத்தரவு..

கோவை மாநகர பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடையாளம் தெரியாத ஒருவர் நேற்று இரவு காவல் நிலையத்திற்குள் நுழைந்து முதல் மாடியில் உள்ள உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் வேட்டியால் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இன்று காலை காவலர் செந்தில் குமார் அலுவலக கதவை திறக்க முயன்ற போது, அது உள்ளிருந்து தாழ்ப்பாளிடப்பட்டு இருந்தது. கதவை உடைத்து பார்த்த போது நபர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். தகவல் அறிந்ததும், உயரதிகாரிகள், தடய நிபுணர்கள் மற்றும் கைரேகை குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், உயிரிழந்தவர் பேரூரைச் சேர்ந்த அறிவொளி ராஜன் (60) என அடையாளம் காணப்பட்டார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இரவு பணியில் இருந்த காவலர் செந்தில்குமார் மற்றும் அலுவலக அறையை பூட்டாமல் இருந்த உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆகிய இருவரையும் ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவிட்டு உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.