குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றை சமஸ்கிருத மொழியிலும், இந்தி மொழியிலும், மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றை சமஸ்கிருத மொழியிலும், இந்தி மொழியிலும், மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து, கண்டன கோஷங்களை எழுப்பி புதிய சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வாணியம்பாடி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் உமர் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.