News இந்தியா

கேரளா வயநாடு நிலச்சரிவு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

  • July 30, 2024
  • 0

கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். மேலும் பேரிடர் நிகழ்ந்தது எப்படி என்பது குறித்தும் விவரித்துள்ளார். வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “வயநாடு

கேரளா வயநாடு நிலச்சரிவு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். மேலும் பேரிடர் நிகழ்ந்தது எப்படி என்பது குறித்தும் விவரித்துள்ளார்.

வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “வயநாடு நிலச்சரிவு, முதல் நிலச்சரிவு செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு நிகழ்ந்தது. இதன்பின் 4.30-க்கு இரண்டாவது முறையாக நிலச்சரிவு நிகழ்ந்தது. சூரல்மலா பகுதியில் உள்ள ஒரு பள்ளி முழுவதும் மண்ணின் அடியில் புதைந்துவிட்டது. இதே நிலைதான் குடியிருப்புகளுக்கும் நிலவியது. இதுவரை 93 உடல்களை மீட்டுள்ளோம். 128 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சில உடல்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டபோது கண்டெடுக்கப்பட்டன. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம். ” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 3,069 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 5 அமைச்சர்கள் ஒருங்கிணைந்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளைக் கண்காணித்து வருகின்றனர்.

கனமழை பெய்யும் என்ற முன்னறிவிப்பு காரணமாக அப்பகுதி மக்களை பெரும்பாலானோரை முகாம்களில் தங்கவைத்தோம். இப்பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இன்று வரை 64 முதல் 224 மி.மீ மழை பெய்யும் என்று சொல்லப்பட்டது. ஆனால், 48 மணிநேரத்தில் 572 மி.மீ மழைப் பொழிவு இப்பகுதியில் இருந்துள்ளது. எதிர்பாராத இந்த மிக கனமழையும், மேக வெடிப்பும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த நிலச்சரிவும் இந்த பேரிடர் நிகழ காரணமாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.