தமிழ்நாடு

#Breaking: விஷ சாராயம்.. ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிர்ச்சி ரிப்போர்ட்..!

  • June 20, 2024
  • 0

விஷ சாராயம் குடித்து ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளர்வகளில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் அனைவரும் கவலைக்கிடமாக உள்ளனர் என்று ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது…. இது குறித்து ஜுவ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…. ஜிப்மர் மருத்துவமனையில்

#Breaking: விஷ சாராயம்.. ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிர்ச்சி ரிப்போர்ட்..!

விஷ சாராயம் குடித்து ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளர்வகளில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் அனைவரும் கவலைக்கிடமாக உள்ளனர் என்று ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது….

இது குறித்து ஜுவ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது….

ஜிப்மர் மருத்துவமனையில் ஜூன் 19, 2024 அன்று விஷச்சாராயம் அருந்திய 19 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர், மீதமுள்ள அனைவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

10 நோயாளிகளுக்கு மூச்சுசம்பந்தப்பட்ட சிரமம் இருந்ததால் அவர்களுக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு,உயர்தர உயிர்காக்கும் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 6 நோயாளிகளும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 16 நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அனைத்து நோயாளிகளுக்கும் பலதரப்பட்ட மருத்துவ குழுக்களால் மிகுந்த கவனத்துடன்சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என்று சித்தூர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.