News அரசியல் தமிழ்நாடு

டாஸ்மாக் மது விற்பனையை அதிகரிக்க இலக்கா? – அரசுக்கு ராமதாஸ் கண்டனம்!

  • August 17, 2024
  • 0

டாஸ்மாக் மது விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலமாக அரசே மது விற்பனையை மேற்கொண்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு மதுவிலக்கை அமல்படுத்த வேனும் என்பது அரசியல் கட்சிகளின் பிரதான

டாஸ்மாக் மது விற்பனையை அதிகரிக்க இலக்கா? – அரசுக்கு ராமதாஸ் கண்டனம்!

டாஸ்மாக் மது விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலமாக அரசே மது விற்பனையை மேற்கொண்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு மதுவிலக்கை அமல்படுத்த வேனும் என்பது அரசியல் கட்சிகளின் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது. இந்த சூழலில், கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் மது விற்பனை நான்கு சதவிகிதம் குறைந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், மது விற்பனையை ஒவ்வொரு மாதமும் 5% அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்று டாஸ்மாக் அதிகாரிகளுக்கு நிர்வாகம் ஆணையிட்டிருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன என்றும், மக்கள் நலன் காப்பதாகக் கூறிக் கொள்ளும் அரசு, மதுபான விற்பனையை அதிகரிக்க இலக்குகளை நிர்ணயித்து செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, “மதுபான வர்த்தகத்திற்கு அரசே இலக்கு நிர்ணயித்திருப்பது தலைகுனிய வேண்டிய செயல். மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தான் அரசை நடத்த வேண்டும் என்றால் அதனை விட அவமானம் வேறு எதுவும் இல்லை.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் நல அரசா? மது ஆலை அதிபர்கள் நல அரசா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்த அவர், மது விற்பனை குறைந்தால், மக்கள் மது போதையிலிருந்து விடுபடுகிறார்களே? என்று நினைத்து மகிழ்ச்சியடைய வேண்டியது அரசு தான் என்றும், ஆனால், மகிழ்ச்சி அடைவதற்கு மாறாக பதற்றம் அடைவது ஏன்? என்பது தான் புரியவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

படிப்படியாக மது விலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது பதவிக்காலம் முடிவதற்குள் அனைத்து மதுக்கடைகளையும் மூடி மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். எந்தெந்த மாதங்களில் எவ்வளவு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பது தொடர்பான கால அட்டவணையையும் தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்” என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.