வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வன்முறை களமாக மாறிய நிலையில் அந்நாட்டு அதிபராக இருந்த ஷேக் ஹசீனா அவசர அவசரமாக வெளியேறினார். இதையடுத்து புதிய ஆட்சி அமைந்துள்ளது. இந்நிலையில் ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் அமைந்திருக்கிறது. இதற்கு பல்வேறு மாணவர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அமைதியான நடந்து வந்த போராட்டம் ஒருகட்டத்தில் வன்முறை களமாக மாறியது. இதில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் வங்கதேச நிலவரம், இரு நாட்டு எல்லை பகுதியின் தற்போதைய சூழல் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எடுத்துரைத்தார். அடுத்தகட்டமாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு செல்ல ஷேக் ஹசீனா திட்டமிட்டிருக்கிறார்.