21/05/2026
அரசியல் ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு தலையங்கம் பொய் பொய்யப்பன்

Alert: லஞ்சம் குறித்து புகார் தந்தால் ரூ. 1 லட்சம் பரிசா? உண்மை என்ன? #factcheck

  • May 19, 2026
  • 0

புகாருக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால், அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வருகிறது.

Share:
Alert: லஞ்சம் குறித்து புகார் தந்தால் ரூ. 1 லட்சம் பரிசா? உண்மை என்ன? #factcheck

எந்தத் துறையாக இருந்தாலும் சரி, இனி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், அது குறித்து ஆதாரத்துடன் புகார் அளிப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இதன் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

நாம் தேடிப்பார்த்ததில், இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக எந்த அரசுத்துறைகளின் பக்கத்திலும் வெளியாகவில்லை. செய்தி வெளியீடாக செய்தித்துறையின் சார்பிலும் வெளியிடப்படவில்லை. அந்த வகையில் இது ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் என்பது தெளிவாகிறது.

அத்துடன், இதுகுறித்து வெளியான செய்திகள் என்று பார்க்கப்போனால் தினமலர் காணொளியாகவும் தினத்தந்தி இணையத்தில் ஒரு செய்திக்கட்டுரையும் வெளியாகி இருந்தது. ஆனால், இரண்டிலுமே அறிவிப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. மாறாக, சமூக வலைதளங்களில் பரவிய தகவலே இருந்தது.

இதன்மூலம், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத ஒரு தகவலை கவனக்குறைவாக இந்த இணையதளங்கள் பதிவிட்டுள்ளன என்பது தெளிவாகிறது. மேலும், பரவிய செய்தியும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

எனில் அந்த தொலைபேசி எண்?
பரவும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால், அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வருகிறது.\

நீங்கள் இதை வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நேரம் தினத்தந்தி தன் இணையத்தில் இருந்து அந்தச் செய்தியை நீக்கிவிட்டது.

இன்னும் தினமலர், குமுதம், சமயம் தமிழ் போன்ற இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இப்போது இன்னும் அதிகமான நிறுவனங்கள் போட்டிக்காக தெரிந்தே இந்த அதிகாரப்பூர்வமற்ற தகவலை செய்தியாக்கி, உண்மையைப் போல உருவம் கொடுக்கும்.

தகவல் வெளியாகி உள்ளது என்று பரவும் பதிவுகள் முதலில் அடையாளம் தெரியாத சமூக வலைதளக் கணக்குகளில் இருந்து பரப்பட்டுள்ளன. பின்னர், தவெக ஆதரவுக் கணக்குகளில் இருந்து வெளியாகி இருப்பதைப் பார்க்க முடிகிறது.

எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாத நிலையில், எல்லோரும் பேசுவது போல ஒரு தோற்றத்தை மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கியுள்ளது இந்தப் பதிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *