பிரபல யூ-டியூபர் துருவ் ரத்தே மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் டெல்லி நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இவர் பாஜகவை தொடர்ந்து டார்கெட் செய்து வரும் நிலையில், அவர்களும் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து
பிரபல யூ-டியூபர் துருவ் ரத்தே மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் டெல்லி நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இவர் பாஜகவை தொடர்ந்து டார்கெட் செய்து வரும் நிலையில், அவர்களும் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
துருவ் ரத்தே என்ற பெயர் வட இந்தியாவில் மிகவும் பிரபலம். இவர் ஒரு யூ-டியூபர். மத்திய பாஜக அரசு, பாஜக கட்சி, பிரதமர் மோடி என டார்கெட் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக 2024 மக்களவை தேர்தலின் போது பாஜகவின் பின்னணி வேலைகள் குறித்து அம்பலப்படுத்தி வெளியிட்ட வீடியோக்கள் பெரிதும் வைரலாகி வருகின்றன. இதை காங்கிரஸ் கட்சியினர் தங்கள் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி கொண்டது கவனிக்கத்தக்கது.
துருவ் ரத்தே யூ-டியூபிற்கு 2.36 கோடி சப்ஸ்கிரைபர்கள் இருக்கின்றனர். இந்த சேனலில் பதிவிடப்படும் வீடியோக்கள் ஒவ்வொன்றும் சராசரியாக 1.5 கோடியை தாண்டி விடுகிறது. அந்த அளவிற்கு பிரபல யூ-டியூபராக வலம் வருகிறார். ஆளும் அரசை பகைத்து கொண்டால் எப்போது வேண்டுமானாலும் சிக்கல் வரலாம். அதை எப்படி அணுகுகிறார் என்பதை பொறுத்து தான், அடுத்து வரும் நாட்கள் அமையும்.
இந்த சூழலில் ஜூலை 7ஆம் தேதி தனது யூ-டியூப் சேனலில் “கோதி யூ-டியூபர்களுக்கு என்னுடைய பதில்” என்ற பெயரில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனை இதுவரை 2.7 கோடி பேர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ தான் தற்போது துருவ் ரத்தேவிற்கு சிக்கலாக வந்து நிற்கிறது. அதில் பிரதமர் மோடி குறித்து அவதூறான விஷயங்களை கூறியிருப்பதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சுரேஷ் கரம்ஷி நகுவா வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் அங்கித் ஜெயின், சுரேஷ் நகுவா, தஜிந்தர் பக்கா போன்ற மோசடி பேர்வழிகளின் சமூக வலைதள கணக்குகளை பிரதமர் மோடி பின் தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார். அதில் தன்னுடைய பெயர் இடம்பெற்றிருக்கிறது. இந்த வீடியோவை சாமானிய மக்கள் பார்க்கும் போது தவறான கண்ணோட்டத்தை உருவாக்கி விடும்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருவதால் பல கோடி பார்ப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். இதனால் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும். இவ்வாறு தவறான கருத்துகளை பரப்பியதற்காக துருவ் ரத்தே மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்ற நீதிபதிகள், யூ-டியூபர் துருவ் ரத்தே நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளது.