News இந்தியா

சந்திரயான் – 3 திட்ட விஞ்ஞானிகள் குழுவுக்கு விருது

  • August 7, 2024
  • 0

அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக சந்திரயான் – 3 திட்ட விஞ்ஞானிகள் குழுவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திரயான் – 3 திட்ட விஞ்ஞானிகளுக்கு ராஷ்ட்ரிய விக்யான் புரஸ்கார் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம்

சந்திரயான் – 3 திட்ட விஞ்ஞானிகள் குழுவுக்கு விருது

அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக சந்திரயான் – 3 திட்ட விஞ்ஞானிகள் குழுவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் – 3 திட்ட விஞ்ஞானிகளுக்கு ராஷ்ட்ரிய விக்யான் புரஸ்கார் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் ராஷ்ட்ரிய விக்யான் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் உள்ளிட்ட விஞ்ஞானிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் பத்திரமாக தரையிறங்கி, உலக சாதனையை படைத்தது. இந்த நாளை மத்திய அரசு தேசிய விண்வெளி தினமாக அறிவித்து உள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 23ம் தேதி முதல் தேசிய விண்வெளி தினத்தை, இந்தியா கொண்டாட உள்ளது குறிப்பிடத்தக்கது.