News அரசியல் இந்தியா

பட்ஜெட் எங்கள் கனவுத் திட்டம்” பிரதமர் மோடி பேச்சு…

  • July 22, 2024
  • 0

நாளை (ஜூலை 23) நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இதையொட்டி, மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளார். தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை

நாளை (ஜூலை 23) நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது.

இதையொட்டி, மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை இழந்து கூட்டணி அரசு அமைத்துள்ள நிலையில், பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ‘விக்சித் பாரத்’ திட்டத்துக்கான அடித்தளமாக பட்ஜெட் இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியபோது, “மக்களுக்கு நான் உத்தரவாதங்களை அளித்து வருகிறேன். அவற்றைக் களத்தில் செயல்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அமிர்த காலத்துக்கு இதுவொரு முக்கியமான பட்ஜெட்.

நிர்மலா சீதாராமன்Budget 2024: நிஃப்டி பட்ஜெட்டிற்கு பிறகு ஏற்றம் காணுமா? எதற்காக இந்த தடுமாற்றம்?
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எங்களது திசையை இந்த பட்ஜெட் காட்டும். எங்களது கனவுத் திட்டமான விக்சித் பாரத் திட்டத்துக்கும் இந்த பட்ஜெட் ஒரு பலமான அடித்தளத்தை ஏற்படுத்தும். இந்தியா 8 சதவிகித வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் உஷார் நிலையில் இருப்பதால், இன்று பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியது. எனினும், பொருளாதார அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபிறகு, பங்குச் சந்தை சரிவில் இருந்து ஏற்றம் கண்டது.

இன்றைய வர்த்தகத்தில் என்.டி.பி.சி, பாரத் பெட்ரோலியம், மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், டாக்டர் ரெட்டி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளன. விப்ரோ, கோட்டக் மஹிந்திரா பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐ.டி.சி, எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் ஆகிய பங்குகள் சரிந்துள்ளன.