BCCI-யின் புதிய செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மகன் ரோஹன் ஜெட்லி நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய செயலாளராக இருக்கும் ஜெய்ஷா, அடுத்த மாதம் ICC தலைவராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனால்,
BCCI-யின் புதிய செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மகன் ரோஹன் ஜெட்லி நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய செயலாளராக இருக்கும் ஜெய்ஷா, அடுத்த மாதம் ICC தலைவராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனால், அந்த பதவிக்கு, டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கும் ரோஹன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டால், அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மகனும் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான ரோஹன் ஜெட்லி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் அடுத்த செயலாளராக தேர்வு செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குழுவில் உள்ள 16 உறுப்பினர்களில் 15 பேரின் ஆதரவு ஜெய் ஷாவுக்கு இருப்பதாகவும், இதனால் அவர் ஐஐசி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.