ஊடகவியல் குற்றமா? 2025இன் முதல் களபலியான பத்திரிகையாளர் முகேஷ்
- January 4, 2025
- 0
ஊடகவியல் குற்றமல்ல என்று அழுத்தி சொல்ல வேண்டியதன் மற்றுமொரு காரணம் என்ற அளவில் கடக்க கூடிய செய்தி அல்ல இது.
ஊடகவியல் குற்றமல்ல என்று அழுத்தி சொல்ல வேண்டியதன் மற்றுமொரு காரணம் என்ற அளவில் கடக்க கூடிய செய்தி அல்ல இது.
ஊடகவியல் குற்றமல்ல என்பதை மீண்டும் மீண்டும் இந்த உலகத்துக்கு நினைவூட்டிய வேண்டியது தேவையாயிருக்கிறது போலும். அபாயங்கள், அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் என்பவனற்றைத் தாண்டி பல சமயங்களில் உயிரிழப்பு வரையிலும் என பத்திரிகையாள்கையின் அபாயபட்டியல் சங்கிலித் தொடராக நீண்டுகொண்டே செல்கின்றன.
இந்த அபாயச்சங்கிலியால் கடைசியாக பலியாகியிருக்கிறாரா சத்தீஸ்கரைச் சேர்ந்த முகேஷ் சந்திரகர் என்ற இளம் பத்திரிகையாளர் என்ற கேள்விதான், இந்த நேரம் நம் மனதை உலுக்கும் கேள்வி.
திடீரென்று கடண்டஹ் புத்தாண்டு தினத்தன்று காணாமல் போன முகேஷை நட்பும் உறவுகளும் தேடிவந்த சூழலைல், நேற்று [வெள்ளிக்கிழமை] பிஜப்பூர் மாவட்டத்தில் அரசு சாலை ஒப்பந்ததாரருக்கு சொந்தமான வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த முகேஷ்
சத்தீஸ்கரை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர், முகேஷ் சந்திரகர் [33 வயது]. அம்மாநிலத்தில் உள்ள மாவோயிஸ்ட்டுகளுக்கும் அரசுக்கும் இடையில் நிலவி வரும் பழங்குடியினரின் பிரச்சனைகளை வெளிப்படுத்தி வந்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப்பட்ட கோப்ரா கமாண்டோவை பேச்சுவார்த்தை நடத்தி விடுவிப்பதில் முகேஷ் முக்கிய பங்கு வகித்தார். குறிப்பாக மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமுள்ளதாக சொல்லப்படும் பஸ்தார் பகுதியில் மிகச்சிறப்பான செய்தியாள்கை செய்ததற்காக தொடர்ந்து பாராட்டப்பட்டவர்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 2ஆம் தேதி முகேஷின் சகோதரர் தனது சமூக வலைதளக் கணக்குகளில், தனது அண்ணனை கானவில்லையென்றும் யாராவது தகவல் கிடைத்தால் சொல்லுங்கள் என்றும் பதிவிட்ட பிறகுதான் முகேஷ் குறித்து வெளியுலகம் கவனிக்கத் தொடங்கியது. அப்போதும் அவர் இறப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
என்ன நடந்தது?
அதே ஜனவரி 2ஆம் தேதி காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து தேடுதல் தொடங்கியது. கடந்த 1ஆம் தேதி உள்ளூர் ஒப்பந்ததாரரான சுரேஷ் சந்திரகர் என்பவரின் சகோதரர் முக்கேஷை அழைத்துள்ளார். அழைப்பின்பேரில் அங்கு செல்ல திட்டமிட்ட முகேஷ் இந்த சந்திப்பு குறித்து தன் சக பணியாளர் ஒருவரிடம் தகவல் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். அதன்பிறகு தகவல் ஏதும் இல்லை. 2ஆம் தேதி நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் முகேஷின் செல்போன் அணைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
செல்போன் கடையாக அணைக்கப்பட்ட இடத்தை தேடி கண்டுபிடித்த காவல்துறையினர், அவ்விடம் சுரேஷ் சந்திரகருக்கு சொந்தமானது என்பதையும் கண்டறிந்தனர். அங்கு சோதித்தபோது அண்மையில் மேற்பகுதி பூசப்பட்ட செப்டிக் டேங்க் இருந்ததை கவனித்தனர். சந்தேகப்பட்டு அதனை உடைத்துப் பார்த்தபோதுதான் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம். காணாமல் போன முகேஷ் சந்திரகர் இறந்த நிலையில், அந்த கழிவுநீர் தொட்டிக்குள் ஊறிக்கிடந்தார். (தரவுகள் முகேஷ் பனிபுரிந்த என்.டி.டி.வியின் செய்திக்குறிப்பில் இருந்து எடுத்தாளப்பட்டு, அவரது சகோதரரிடம் Penpoint குழுவால் உறுதி செய்யப்பட்டவை )
இதனையடுத்து காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து மேலதிக விசாரணையைத் தொடங்கியுனர். இந்த கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பீஜப்பூரில் பத்திரிகையாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
பின்னணி என்ன?
அண்மைக்காலமாக முகேஷுக்கு தொடர் மிரட்டல்கள் வந்து கொண்டே இருந்தன என்று முகேஷின் தம்பி உட்பட குடும்பத்தார் மொத்தமும் தெரிவிக்கின்றனர். அதற்கு காரணமாக, முகேஷ் அண்மையில் வெளிக்கொணர்ந்த சாலை ஊழல் குறித்த செய்தியும் குறிப்பிடப்படுகிறது.
காவல்துறை புகாரிலும் கூட கடைசியாக பிஜப்பூரில் நடந்த அரசு சாலை கட்டுமான ஊழல் குறித்து செய்தி வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் மீது விசாரணை நடந்தது. இந்த ரூ. 120 கோடி மதிப்பிலான பஸ்தர் சாலை கட்டுமானத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, ஒப்பந்ததாரர் சுரேஷிடம் சில நாட்களுக்கு முன் முகேஷ் எடுத்த பேட்டியில் பல கேள்விகளை கேட்டிருந்தார்.
தலையிலும், முதுகிலும் கடுமையான காயங்களுடன் காணப்பட்ட, பத்திரிகையாளர் முகேஷின் உடல், மீண்டும் மீண்டும் எழுப்புவது ஒரே கேள்வியைத்தான். ஊடகவியல் என்ன குற்றமா?
அபாயகரமான சர்க்கஸ் கலைஞர், எல்லையிலிருக்கும் ரானுவ வீரர்,
மானசீக வாய்க்கரிசியுடன் கடலுக்குச் செல்லும் மீனவன் என அச்சுறுத்தல் நிறைந்த பணிகளின் பட்டியலில் இதழியலும் சேர்ந்துவிட்டது என்பதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும்.