TVK எம்எல்ஏக்கள் மீது முதல்வர் விஜய்க்கு நம்பிக்கை இல்லை.. ஒரு நாள் கிளம்பி எழுவார்கள். ஆட்சி கவிழும்- முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி.!
காமராஜரின் 124 வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகரில் உள்ள வஉசி மார்க்கெட் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..
அதனைத் தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இங்கு இருக்கின்ற ஆட்சியாளர்கள் மக்களைப் பற்றி கவலைப்படாமல் குறிப்பாக டெல்டா பகுதியாக இருக்கின்ற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் மேகதாது அணை பிரச்னைகளை எடுத்து பாரத பிரதமரை அணுகி உடனடியாக அந்த பகுதிக்கு தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் எதையோ குழப்பிக் கொண்டிருக்கிறார்களே தவிர அவர் ஆட்சி செய்யவில்லை…
மக்களை ஏமாற்றுவதற்கு என்னென்ன வழிகள் உண்டோ அதை மட்டும்தான் செய்கின்றார்கள்.. தஞ்சையில் டெல்டா பகுதியில் இருக்கின்ற மக்கள் இந்த முதலமைச்சரை முதலமைச்சர் தேவையா என்று கேட்கின்ற நிலை இருக்கிறது..
தமிழக வெற்றி கழகத்தில் இருக்கின்ற எம்எல்ஏக்கள் மீது இன்றைக்கு இருக்கும் முதலமைச்சருக்கு நம்பிக்கை இல்லை.. எம்எல்ஏக்கள் எங்கேயாவது திடீரென்று ஓடிவிடுவார்களோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது.. அதனால் தான் இது போன்ற மிரட்டல்களை ஏற்படுத்தினால் அவர்கள் எங்கேயோ போகாமல் பாதுகாக்கப்படுவார்கள் என்ற நிலையை முதலமைச்சர் எடுத்திருக்கிறார்.. என்ன நடவடிக்கை எடுத்தாலும் சரி மொத்தமாக தமிழக வெற்றி கழக எம்எல்ஏக்கள் ஒரு நாள் கிளம்பி எழுவார்கள்..இந்த ஆட்சி கவிழும் என்றார்..