01/06/2026
News தமிழ்நாடு

பெண் பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லை என்பதற்காக தற்கொ*லையா?

  • August 4, 2025
  • 0

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது இளைய மகன் ஆதித்யா (வயது 20). இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்தவர்

பெண் பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லை என்பதற்காக தற்கொ*லையா?

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது இளைய மகன் ஆதித்யா (வயது 20). இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்தவர் நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். நீீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர்.

அப்போது வீட்டின் அருகில் உள்ள புளிய மரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்பு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆதித்யாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கண்டவராயன்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜார்ஜ் ஜேக்கப் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஆதித்யா கல்லூரி பயின்று வரும் இடத்தில் ஒரு பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காதலி தன்னிடம் பேசவில்லை என்பதால், கல்லூரிக்கு சரியாக போகவில்லை எனவும் சொல்ப்படுகிறது. தனக்கு ஆகஸ்ட் மூன்றாம் தேதி (நேற்று) பிறந்தநாள் வருகிறது. அன்று என் காதலி எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லவில்லை என்றால் என் உயிரை மாய்த்துக் கொள்வேன், எனக்கு அன்றுதான் கடைசி நாள், என் வாழ்நாளை தீர்மானிக்க கூடியதும் அன்றுதான் என தனது நண்பர்களிடம் சில மாதங்களுக்கு முன்பு கூறியதாகவும், இவன் எப்பவும் இதே போல்தான் கூறுவான் என நண்பர்கள் வழக்கம்போல் விளையாட்டாக எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று மாலை வரை நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிய ஆதித்யா திடீரென இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த கல்லூரியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.