நெல்லையில் ஆணவக் படுகொலை செய்யப்பட்ட கவின் உடல் இன்று தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்திற்கு உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. அப்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். அப்போது சீமான் கவின் உடலுக்கு வீர வணக்கம் செலுத்திய பின்னர் கவின் தாயாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது சீமானிடம் கதறி அழுத கவினின் தாய், கவினை கொலை செய்த சுர்ஜித் குறித்து கடும் கோபத்துடன் சீமானிடம் நடந்ததை தெரிவித்தார். தொடர்ந்து சீமானிடம் கவின் தாயார் எனது மகனின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என சீமானிடம் கூறினார். அப்போது உடனே அங்கிருந்தவர்களை அழைத்த சீமான் அம்மாவை உடனே அங்கே கூட்டி சொல்லுங்கள் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது உடலை ஏற்கனவே இடுகாட்டிற்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. இதனால் மீண்டும் கதறி அழுதபடி கவின் தாயார் அங்கு மீண்டும் அமர்ந்தார். தொடர்ந்து சீமான் அவரை ஆசிவாசப்படுத்தினார். இந்த காட்சிகளால் அங்கு கடும் சோகம் எழுந்தது.