01/06/2026
News தமிழ்நாடு

கவின் கொலை வழக்கு., இன்ஸ்பெக்டர் மிரட்டல் – திருமாவளவன்

  • July 31, 2025
  • 0

திருநெல்வேலி மாவட்டம், கே டி சி நகரில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஐடி ஊழியர் கவின் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கவினின் பெற்றோர்கள் இந்த கொலைக்கு அந்த கவின் காதலித்த பெண்ணின் பெற்றோர்கள் தான் காரணம்

கவின் கொலை வழக்கு., இன்ஸ்பெக்டர் மிரட்டல் – திருமாவளவன்

திருநெல்வேலி மாவட்டம், கே டி சி நகரில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஐடி ஊழியர் கவின் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கவினின் பெற்றோர்கள் இந்த கொலைக்கு அந்த கவின் காதலித்த பெண்ணின் பெற்றோர்கள் தான் காரணம் என கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதை தொடர்ந்து இன்று 4வது நாளாக கவினின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து வருகின்றனர்..

இந்த நிலையில் படுகொலையான கவினின் குடும்பத்தை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்..

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று இருக்கும் இந்த சூழளில், உடனே கிளம்பி வர முடியவில்லை. குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப் பட வேண்டும் என்று அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த பிரச்னை நாடு தழுவிய பிரச்னை, தேசிய அளவில் சட்டம் தேவை. மேலும் உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக வழிகாட்டு முறை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த மாநிலமும் இதனை பின்பற்றவில்லை. இந்த கொலையானது அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது.

எம் பி ரவிக்குமாரும், நானும் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அலுவகத்தில் மனு அளித்துள்ளோம். வாய்ப்பு கிடைத்தால் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.

சட்டம், ஒழுங்கு மீது தமிழக அரசு கவனம் செலுத்துகிறது. குற்றவாளியின் தாய், தந்தையர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது ஆகவே உடனடியாக கைது செய்ய வேண்டும். ஆனால் காவல்துறை தாயை கைது செய்ய தயக்கம் காட்டுகிறது. கவினின் தந்தை ஜனநாயக முறைப்படி தான் தாய் தந்தையரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றார். காவல் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், இன்ஸ்பெக்டர் மிரட்டல் விடுத்துள்ளார். இது போன்ற போலீசார் கட்டப்பஞ்சாயத்து நடத்துகின்றனர் இது ஏற்புடையது அல்ல, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்..