அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மாவட்டம் என்பதால் எந்த தடையும் எங்களுக்கு இல்லை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேட்டி
ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது அச்சுறுத்துகிறது …
தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சிக்கும் செயலில் தான் ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேட்டி… ஓரணியில் தமிழ்நாடு நிகழ்வு குறித்து சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கலைஞர் மாளிகையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்
நாளைக்கு ரெண்டு நாடாளுமன்ற உறுப்பினர் 3ஆம் தேதி ரெண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைப்பார்கள்
சேலம் மத்திய மாவட்டத்தில் இருக்கிற தொகுதி பார்வையாளர்கள் அதே நேரத்திலே மாவட்ட கழக நிர்வாகிகள் முன்னோடிகள் அணியிலே சார்பணியில் இருக்கிற நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் எல்லோரும் இணைந்து அதில் ஈடுபட இருக்கிறார்
மூன்றாம் தேதி இதுல எந்த தடையும் இல்லை எல்லோரையும் நேரிலே அணுகி எங்களை எங்கள் இயக்கத்திலே உறுப்பினராக இருந்தது என்று அவர்களிடத்திலே கேட்டுக் கொள்வோம். அதன் அடிப்படையில் அவர்களுடைய விருப்பத்தை பொறுத்து இருக்கிறது நாங்கள் அந்த முயற்சியிலே முழுமையாக எடுப்போம்.
நான்காண்டு சாதனைகளை எல்லாம் எடுத்து வைப்போம் இப்போது நான் சொன்னது ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது, அச்சுறுத்துகிறது பல்வேறு நிலைகளிலே தொடர்ந்து தொல்லை கொடுக்கிற அரசாங்க ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாடு அரசுக்கு தொல்லை தந்து கொண்டிருக்கிறது. அதை எல்லாம் முறியடிக்கிற வகையில் அதை மக்களிடத்திலே எடுத்துச் சொல்லக்கூடிய வகையிலே இந்த உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம் பூரணியில் தமிழ்நாடு முழக்கம் அமைதி.
ஜனநாயக அடிப்படையிலே நாங்கள் மாபெரும் ஜனநாயக இயக்கம் திமுக நாங்கள் இப்பெரு முயற்சி எடுக்கிறோம். மக்களையெல்லாம் ஒன்று திரட்டி ஒன்றிய பாஜக அரசை அவருடைய மக்கள் விரோத போக்கினை கண்டிக்கிற விதத்திலே நாங்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். எதிர்க்கட்சிகளே இல்லாத நிலை என்கிற நோக்கம் எங்களுக்கு அல்ல எனவே நாங்கள் கண்ணியத்தோடு கட்டுப்பாட்டோடு கடமை உணர்வோடு இந்த பணியினை நிறைவேற்றும்.