அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணறு கிராமத்தில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பு;
முதலமைச்சர் அவர்கள் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கங்களை எடுத்து சொல்லியுள்ளார். அதேபோல விருதுநகர் வடக்கு மாவட்டம் சார்பில் 3 சட்டமன்ற தொகுதியில் வீடுவீடாக சென்று வாக்காளர்களை சந்திக்கும் பணியை துவங்கியுள்ளோம். எதிர்வரும் 45 நாட்களில் திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்து கூற உள்ளோம்.
இது உறுப்பினர் சேர்க்கை மட்டும் கிடையாது தமிழ்மொழியின் பெருமைகள் கலாச்சாரத்தை எடுத்து கூறி ஜாதிமத பேதமின்றி பரப்புரை நடைபெற உள்ளது. பாசிச பாஜகவின் கோரப்பிடியில் தமிழ்நாடு சிக்கி விடக்கூடாது.
தமிழர்களின் தொன்மையை மறைக்க கூடிய வகையில் பாஜக செயல்படுகிறது. தொடர்ச்சியாக நாம் வஞ்சிக்கப்பட்டு வருகிறோம். மாநிலத்தின் உரிமையை மத்திய அரசு கையில் எடுத்து கொண்டு உரிய வரிப்பகிர்வை கொடுக்காமல் வஞ்சிக்கப்பட்டு வருகிறோம்.
தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் நாடாளுமன்றத்தில் நம் குரல்வளை நசுக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் நாளை வடக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.