சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி கிழக்கு பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த செல்வத்தின் மகன் சந்தோஷ் ( 26 ) இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடம்பூர் அருகே உள்ள கோவில் குடும்ப விழாவிற்கு சென்றுள்ளார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது, பின்னர் நட்பாக பழகி வந்த சந்தோஷ் சிறுமியை மிரட்டி பல முறை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார், இதனை தொடர்ந்து மீண்டும், மீண்டும் சந்தோஷ் சிறுமியை தொந்தரவு செய்ததால் மனமுடைந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமி அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் சந்தோஷை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்,