தமிழகத்தில் அடுத்த மாதம் 2346 இடைநிலை ஆசிரியர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர், தருமபுரியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை தனியார் பள்ளியில் மாநில அளவில் தலைமை ஆசிரியர்களுக்கு அடைவு தேர்வு குறித்த ஆய்வு கூட்டம் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்,
தருமபுரி மாவட்டம் மாநில அளவில் 22 இடத்தில் இருக்கிறது. அதை இன்னும் முன்னே கொண்டு வர வேண்டும். மாணவர்களுக்கு புரிதல் கொள்ளும் அளவில் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த ஆய்வு கூட்டத்தில் பல்வேறு விதமான அறிவுரைகளை தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி இருக்கின்றோம். முழுமையாக அதை உணர்ந்து தலைமை ஆசிரியர்கள் அவர்களுடைய தரத்தை வலுப்படுத்தும். அடுத்த கல்வியாண்டில் ஆசிரிய பெருமக்கள் அடைவு ரிப்போர்ட்டில் இன்னும் முன்னிலையில் கொடுக்கும் என நம்புகிறோம். தமிழகத்தில் 2346 இடைநிலை ஆசிரியர்கள் ஜூலை மாதத்தில் பணியமத்தப்படுவார்கள். அதில் தருமபுரி உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதிகப்படியாக நியமிக்கப்படுவார்கள். மாணவ, மாணவிகளுக்கு ஒழுக்கம் சொல்லிக் கொடுக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வியாண்டில் பள்ளிகள் தொடங்கி ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு ஒழுக்கம் சொல்லிக் கொடுக்க வேண்டும். அது காவல்துறை மூலமாக மற்ற ஆசிரியர்கள் மூலமாக அறிவுரைகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் திருந்தி கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். மாணவர்கள் பள்ளிக்கு வருவது பாடம் கற்றுக் கொள்ள தான். பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எவ்வித வேலையும் வைக்க கூடாது. வேற எந்த வேலைக்கும் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் விலக்கி வைத்துள்ளோம். குற்றம் நிரூபிக்கப்படாமல் மீண்டும் பணியில் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அதையும் தவறாக பயன்படுத்திவிட கூடாது என்பதற்காக முழுமையாக அது கவனிக்கப்பட்டு வருகிறது. இதனால் நல்ல ஆசிரியர்களும் மன வேதனைக்கு ஆளாகி, தங்களை மாய்த்துக் கொண்டு நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உண்மை இருக்கும் போது யாருக்கும் எந்த கருணையும், பாரபச்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.சதீஷ், முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா உள்ளிட்ட தலைமை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.