01/06/2026
News அரசியல் தமிழ்நாடு

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியில் நடமாட முடியாது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்

  • June 21, 2025
  • 0

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியில் நடமாட முடியாது என மிரட்டிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி உசிலம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் திமுகவினர் புகார் மனு அளித்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்,

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியில் நடமாட முடியாது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியில் நடமாட முடியாது என மிரட்டிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி உசிலம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் திமுகவினர் புகார் மனு அளித்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக சமூக வளைதளத்தில் பதிவு செய்ததாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியில் நடமாட முடியாது என மிரட்டல் விடுத்து பேசியது குறித்தும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி மதுரை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அலெக்ஸ்பாண்டி, வழக்கறிஞர் அணி விக்னேஷ் தலைமையிலான நிர்வாகிகள் இன்று உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரனிடம் புகார் மனு அளித்தனர்.

நேற்று திமுக அமைச்சர் அல்லது மீது அதிமுக முன்னாள் அமைச்சர் புகார் மனு அளித்திருந்த சூழலில், இன்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுகவினர் புகார் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.