அரசியல் இந்தியா தமிழ்நாடு

தமிழை காக்க உறுதியாக இருக்கிறோம்: அன்பில் மகேஷ்

  • September 10, 2024
  • 0

மத்திய அரசு 2018-ம் ஆண்டு சமக்ரா சிக்‌ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) எனும் pre.kg முதல் 12-ம் வகுப்புவரையிலான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 2024 – 2025-ம் கல்வி ஆண்டிற்கான தொகையாக ரூ.3,586

தமிழை காக்க உறுதியாக இருக்கிறோம்: அன்பில் மகேஷ்

மத்திய அரசு 2018-ம் ஆண்டு சமக்ரா சிக்‌ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) எனும் pre.kg முதல் 12-ம் வகுப்புவரையிலான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 2024 – 2025-ம் கல்வி ஆண்டிற்கான தொகையாக ரூ.3,586 கோடி ஒதுக்கப்பட்டது. இதில், மாநில அரசின் பங்கு ரூ.1,434 கோடி போக, மீதமிருக்கும் ரூ.2,152 கோடியை மத்திய அரசு நான்கு தவணைகளில் விடுவிக்க வேண்டும். முதல் தவணை ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டுக்கு வந்துசேர்ந்திருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு, முதல் தவணைத் தொகையை விடுவிக்கவில்லை.

எஸ்.எஸ். திட்டத்தில் நிலுவையில் உள்ள நிதியை NEP நிபந்தனைகள் இன்றி மத்திய அரசு வழங்க வேண்டும் என தர்மேந்திர பிரதானின் பதிவை டேக் செய்து, அன்பில் மகேஷ் வலியுறுத்தியுள்ளார். மேலும், தேசிய கல்விக் கொள்கையின் பல அம்சங்களை தமிழகம் செயல்படுத்தி வருகிறது. அதேசமயம், தமிழ் மொழியின் பாரம்பரியத்தை பாதுகாப்பதில் எப்பொழுதும் உறுதியாக உள்ளோம். தாய்மொழியில் கல்வி கற்பதை எதிர்க்கிறீர்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்