அரசியல் இந்தியா சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு பொய் பொய்யப்பன்

திருப்பூரில் கப்பல் ஸ்டேஷனா?

  • May 31, 2024
  • 0

திருப்பூர் நொய்யலாற்று துறைமுகத்துக்கு நண்பரோடு சென்ற இந்த வார பொய் பொய்யப்பர்

திருப்பூரில் கப்பல் ஸ்டேஷனா?

ஆட்டோ ஸ்டாண்ட் பார்த்திருப்பீர்கள்..

பஸ் ஸ்டாண்ட் பார்த்திருப்பீர்கள்…

ரயில்வே ஸ்டேஷன் பார்த்திருப்பீர்கள்..

விமான நிலையம் கூட பார்த்திப்பீர்கள்….

கப்பல் ஸ்டேஷன் பார்த்து இருக்கின்றீர்களா…???

திருப்பூர் நொய்யல் துறைமுகத்தில்
கொங்கு ராமகிருஷ்ணன்
உடன் நானும்.

பதிவைப் பார்க்க: https://www.facebook.com/share/v/GjJm2hyMhxxjKcGK/?mibextid=oFDknk

மேற்கண்ட பதிவை சமூக வலைத்தளத்தில் கண்டோம். அத்துடன் பிரமாண்டமான ஒரு பயணப்படகுகள் நிறுத்தும் தளத்தின் காணொளியும் இணைக்கப்பட்டிருந்தது.

இதைக் கப்பல் ஸ்டேஷன் என்று குறிப்பிட்டிருக்கிறார். அது கூடாது. இது சொகுசுப் படகு குழாம் அவ்வளவுதான்.

மேலும் திருப்பூர் நொய்யல் ஆற்றில், இந்த துறைமுகம் அமைந்துள்ளதாகவும் அவரும் அவரது நண்பரும் அந்த துறைமுகத்தில் இருந்ததாகவும் எழுதியுள்ளார்.

இதன் உண்மைத்தன்மை குறித்து PenPointNews ஆராய்ந்தது.

உண்மை என்ன?

இந்த காணொளியை ரிவர்ஸ் இமேஜ் முறையை பயன்படுத்தி தேடியதில், இதேபோன்ற படங்களைப் பார்க்க முடிந்தது.

அதன்படி, வங்க தேச நாட்டின் பழைய டாக்கா பகுதியில் உள்ள சதார்காட் பகுதியில் அமைந்துள்ள சொகுசுப்படகு தளம் இது. சுற்றுலா பயணிகளுக்காக இங்கு இந்த சேவையை வங்கதேசம் (பங்களாதேஷ்) நடத்தி வருகிறது.

வங்கதேச அரசின் சுற்றுலாத்துறை தன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் முகப்பு பக்கத்திலேயே இந்த தளத்தின் படத்தையும் வைத்துள்ளது.

வங்கதேச வலைதளம்.  https://beautifulbangladesh.gov.bd/event/115

பொய் பொய்யப்பன்

இதன்மூலம்,  மேற்கண்ட காணொளியில் இருக்கும் சொகுசுப் படகுத்துறை திருப்பூர் நொய்யல் ஆற்றின் துறைமுகம் அல்ல என்பதும் அது வங்கதேச நாட்டிலுள்ள சாதார்காட் என்பதும் தெளிவாகிறது.

ஆனால், இப்படி ஒரு இடத்துக்கு தன் நண்பருடன் சென்றதாக பதிவிட்டு இருக்கும் ‘Nallathe Virumbum Muruganandham’ ( நல்லதே விரும்பும் முருகானந்தம்) 😂😂 என்ற முகநூல் கணக்குக்கு பொய் பொய்யப்பன் என்ற பட்டம் பொருத்தமானதே.