ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடித்ததற்காக ஏழுமலையானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முழங்காலில் நடந்து மலையேறி சென்ற பெண்.
பொதுத் தேர்தலுடன் ஆந்திர சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற்றது தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி என் டி ஏ கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது.
தேர்தல் நடைபெற்ற முடிவுகள் வெளிவந்த போது தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் வகையில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது.
ஆனாலும் ஆந்திராவில் ஜனசேனா, பாஜக ஆகியவை உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைந்துள்ளது.
இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியதற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சித்தூர் மாவட்டம் கலிகிரியை சேர்ந்த கௌரி என்ற பெண் சீனிவாச மங்காபுரத்தில் இருந்து முழங்காலில் நடந்து திருப்பதி மலைக்கு பயணித்தார். அவருடன் உள்ளூர் தலைவர்கள் தொண்டர்கள் ஆகியோரும் திருமதி மலைக்கு பயணித்துள்ளனர்.