06/09/2026
சினிமா தமிழ்நாடு

ஜனநாயகன் திரைப்படம்.. டிக்கெட் கூடுதல் விலை..!

  • July 22, 2026
  • 0

தஞ்சாவூர் திரையரங்கில் 700 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை என விஜய் ரசிகர்கள் குற்றச்சாட்டு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திரையரங்கில் முதலமைச்சர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் 200

ஜனநாயகன் திரைப்படம்.. டிக்கெட் கூடுதல் விலை..!

தஞ்சாவூர் திரையரங்கில் 700 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை என விஜய் ரசிகர்கள் குற்றச்சாட்டு

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திரையரங்கில் முதலமைச்சர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் 200 ரூபாய்க்கு டிக்கெட் முன்பதிவு செய்த நிலையில், தற்போது செல்போனில் கூடுதலாக 700 என செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைத்த ரசிகர்கள் அங்கு சென்று கேட்டபோது ஒரு டிக்கெட்டின் விலை 700 என அவர்கள் கூறியுள்ளனர். அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.