பாளையங்கோட்டை சிறை திமுகவினருக்குப் புதிதல்ல – திமுக எம்எல்ஏ இங்கு அடைக்கப்பட்டது அவருக்கு பெருமையை மக்கள் நலன் சார்ந்த தமிழக உரிமை சார்ந்த நிகழ்வுகளில் திமுக அதிமுக கடந்த காலங்களிலேயே இணைந்து செயல்பட்டுள்ளது யாருக்கோ பயந்து தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி நடத்தி வருகிறது பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை சந்தித்த பின் சிறை வளாகத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பேட்டி
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அவரை திமுக துணை பொது செயலாளர் கனிமொழி முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் வந்து சந்தித்தனர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்ட போது நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து கனிமொழி மார்க்கண்டே என்னிடம் கேட்டு அறிந்தார்.
மேலும் கட்சியின் சார்பில் தேவையான சட்ட உதவிகள் அனைத்தும் செய்யப்படும் எனவும் உறுதியளித்ததாக தெரிகிறது தொடர்ந்து சிறை வளாகத்தில் கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது பாளையங்கோட்டை சிறை திமுகவினருக்குப் புதிதல்ல இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்
திமுகவினர் யார் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர்கள் அதனைப் பெருமையாகவே கருதுவார்கள்.
சமூக வலைதளங்களில் அரசை விமர்சிக்கும் நபர்களை ஒவ்வொரு முறையும் சிறைக்கு அனுப்பும் முயற்சி நடைபெற்று வருகிறது தமிழக வெற்றிக் கழக அரசு ஜனநாயகத்தின் மீது அக்கறையின்றி செயல்படுகிறது என குற்றம்சாட்டினார்.
மேலும் காவல்துறையை எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கு மட்டுமே பயன்படுத்துவதாக அவர் விமர்சித்தார். தன்னை விமர்சிப்பவர்களின் கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஆட்சியாளர்களிடம் இல்லை யாருக்கோ பயந்து கொண்டு இவர் ஆட்சி செய்கிறார்கள் அவர்களின் அதே வழியில்தான் அரசியலும் செய்கிறார்கள் என பாஜகவை மறைமுகமாக சாடினார்.
தமிழ்நாட்டின் நலன் என்று வரும்போது திமுக தனது கொள்கையிலிருந்தும், கருத்துகளிலிருந்தும் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை; இனியும் விட்டுக்கொடுக்காது தமிழக நலன் தமிழக உரிமை சார்ந்த விஷயங்களில் கடந்த காலங்களிலேயே அதிமுகவோடு இணைந்து செயல்பட்டு இருக்கிறோம்.
எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் மசோதாவிற்கு திமுக ஆதரவு அளிக்கக்கூடும் என பல்வேறு செய்திகள் வெளியாகி வருவது குறித்த கேள்விகளுக்கு மற்றவர்களின் அனுமானங்களுக்கு தாங்கள் பதில் சொல்ல முடியாது
கரப்பான் பூச்சி போராட்டம் கையாளப்பட்ட விதம் குறித்த கேள்விக்கு, அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், நீட் தேர்வுக்கு எதிராக திமுக தொடர்ந்து தனது கருத்துகளைப் பதிவு செய்து வருவதாகவும் கூறினார்.
நீட் தேர்வு மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் இருப்பதாகவும், மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது அது கடும் கண்டனத்திற்கு உரியது என்றும் தெரிவித்தார்.