15/10/2026
தமிழ்நாடு

விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஜாமீன் மனு தள்ளுபடி

  • July 22, 2026
  • 0

கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஜாமீன் மனு தள்ளுபடி. காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பு., தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதித்துறை நடுவர் சுமதி உத்தரவு.! தமிழக முதல்வர் குறித்து

விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஜாமீன் மனு தள்ளுபடி

கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஜாமீன் மனு தள்ளுபடி. காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பு.,

தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதித்துறை நடுவர் சுமதி உத்தரவு.!

தமிழக முதல்வர் குறித்து சர்ச்சைகுரிய வகையில் பேசியதால் விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், மார்க்கண்டேயன் தரப்பு வழக்கறிஞர் காசிராஜன் மார்க்கண்டேயனை விடுவிக்க கோரி தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் மனு தாக்கல் செய்திருந்தார். அதுமட்டுமின்றி குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற மனு மீதான விசாரணையும் வந்த நிலையில், தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் என் ஒன்று நீதித்துறை நடுவர் சுமதி மார்க்கண்டேயனை நீதிமன்றத்தில் 3 மணிக்கு ஆஜர் படுத்த உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் மார்க்கண்டேயனை பாளையங்கோட்டை சிறைச்சாலையில் இருந்து போலீசார் தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்..

அப்போது, அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஸ்ரீதேவி வாதாடும் போது, அதாவது, கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஆகியோர் தூண்டுதலின் பேரில் மார்க்கண்டேயன் எம் எல் ஏ தமிழக முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினாரா என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக இரண்டு நாள் போலீஸ் காவல் கேட்பதாக அரசு வழக்கறிஞர் கண்ணன் வாதாடினார்கள்.

இந்த நிலையில், நீதித்துறை நடுவர் சுமதி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்தார் மேலும்.. ஜாமீன் மனுவையும் தள்ளுபடி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.