சினிமா

ராமோஜி ராவ் மறைவு.. ரஜினியின் உருக்கமான பதிவு

  • June 8, 2024
  • 0

ராமோஜி ராவ் பிலிம் சிட்டியின் நிறுவனர் ராமோஜி ராஜ் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ராமோஜி ராவ் ஸ்டூடியோ தென்னிந்தியாவின் அதிநவீன் வசதிகளுடைய ஸ்டூடியோ ஆகும். இங்கு தெலுங்கு முன்னணி நடிகர்களுடைய படங்களும்,

ராமோஜி ராவ் மறைவு.. ரஜினியின் உருக்கமான பதிவு

ராமோஜி ராவ் பிலிம் சிட்டியின் நிறுவனர் ராமோஜி ராஜ் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ராமோஜி ராவ் ஸ்டூடியோ தென்னிந்தியாவின் அதிநவீன் வசதிகளுடைய ஸ்டூடியோ ஆகும்.

இங்கு தெலுங்கு முன்னணி நடிகர்களுடைய படங்களும், தமிழ் முன்னணி நடிகர்களுடைய படங்களும் இங்கு படமாக்கப்பட்டுள்ளது. இத்தகைய பெருமைகளுக்கு சொந்தக்காரரான ராமோஜிக்கு வயது 88 ஆகிறது. சில நாட்களாக மூச்சுத் திணறலால் கஷ்டப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதனால் ஜதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ராமோஜி ராவின் மறைவு தென்னிந்திய திரையுலகினைரை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது. இதனால் பல்வேறு திரையுலகை சார்ந்த பிரபலங்கள் தங்களது எக்ஸ் தளம் வாயிலாக இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த் தன்னுடைய எக்ஸ் தளத்தில் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், என்னுடைய குரு, மறைவுச் செய்தி கேட்டு வேதனை அடைந்தேன், சினிமாவில் மட்டுமில்லாமல் பத்திரிகை துறையில் சாதனை படைத்தவர், அரசியலில் கிங் மேக்கராக இருந்தவர், என்னுடைய வழிகாட்டியாக இருந்தவர், எனக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன், அவரின் ஆத்மா சாந்தியடையட்டும், என பதிவிட்டுள்ளார்.