News அரசியல்

கமல்ஹாசனுக்கு இவ்வளவு கடனா..?

  • June 7, 2025
  • 0

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், சென்னை புரசைவாக்கம் சர் எம் சிடி. முத்தையா செட்டியார் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தமக்கு 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.78.90 கோடி வருவாய்

கமல்ஹாசனுக்கு இவ்வளவு கடனா..?

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், சென்னை புரசைவாக்கம் சர் எம் சிடி. முத்தையா செட்டியார் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தமக்கு 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.78.90 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.69 கோடி. ஒட்டுமொத்த அசையா சொத்துகளின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.245.86 கோடி. கடனாக ரூ.49.67 கோடி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டை, உத்தண்டி, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் மொத்தம் 4 வணிகக் கட்டிடங்களை அவர் வைத்திருக்கிறார். இவற்றின் மொத்த சந்தை மதிப்பு ரூ.111.1 கோடி. திண்டுக்கல்லில் உள்ள வில்பட்டி கிராமத்தில் ரூ.22.24 கோடி மதிப்புள்ள விவசாய நிலமும் கமலுக்கு உள்ளது. மேலும், கமல்ஹாசன் கையிருப்பில் உள்ள ரொக்கம் ரூ.2.60 லட்சம். மகேந்திரா பொலிரோ, பென்ஸ், பி.எம்.டபிள்யூ. லக்சஸ் ஆகிய 4 கார்கள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.8.43 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த சொத்து மதிப்பு ரூ.305.55 கோடி என்று கமல் குறிப்பிட்டுள்ளார். கமலின் வருமானம் 2019-2020 ஆம் ஆண்டில் ரூ.22.1 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.78.9 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *