ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது ஏன்? அஞ்சலையின் சதி திட்டம்..!
July 20, 2024
0
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் தனது வீட்டிற்கு அருகிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் தனது வீட்டிற்கு அருகிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வழக்கறிஞர்கள் மலர்கொடி, ஹரிஹரன் மற்றும் சதீஷ் ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.
மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக ஆற்காடு சுரேஷின் மனைவியும் பாஜக முன்னாள் நிர்வாகியுமான அஞ்சலை நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட பிறகு தனது செல்வாக்கு குறைந்ததோடு கந்துவட்டியில் தொழில் போட்டி அதிகரித்ததாகவும், கட்ட பஞ்சாயத்தில் தான் ஒதுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார் அஞ்சலை. மேலும் அஞ்சலை வட்டிக்கு விட்டிருந்த ஒன்றரை கோடி ரூபாய் பணம் முடங்கியதோடு பலர் போலீசில் புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆற்காடு சுரேஷை வைத்து வட சென்னை பகுதியில் கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி என பெண் தாதாவாக வலம் வந்த தனக்கு, அவரது படுகொலையால் மதிப்பு குறைந்ததாகவும் செல்வாக்கு இல்லாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ஆம்ஸ்ட்ராங்கை பழிவாங்க காத்திருந்ததாகவும் அஞ்சலை கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது ஏன் என்பதற்கான காரணத்தை அஞ்சலை தெரிவித்துள்ளார். அதன்படி தனது கணவர் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் என கூறப்படுவதால் அவரை கொலை செய்ய பல நாட்கள் திட்டம் தீட்டியதாக போலீசாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஆந்திராவில் இருந்து நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதனிடையே தமாக முன்னாள் நிர்வாகியான ஹரிஹரனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி சம்போ செந்தில் உத்தரவின் பேரில் மலர்க்கொடயிடம் 4 நாட்டு வெடிகுண்டுகளை வாங்கியதாக விசாரணையில் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
மேலும் மலர்கொடியிடம் வாங்கிய நாட்டு வெடிகுண்டுகளை கும்மிடிப்பூண்டியில் வைத்து சோதனை செய்ததில் அதன் வீரியம் குறைவாக இருந்ததாகவும் அதனால் ஆந்திராவிற்கு சென்று வெடி மருந்துகளை வாங்கி வந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும் ஹரிஹரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.