ராஜ்குமார் பெரியாசமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் அமரன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் சாய்பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 23 வது படத்தை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் எடுத்து வருகிறார். இப்படம் அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இதில் இணைந்திருக்கிறார். இவர் விஜய்யின் லியோ படத்துக்கு பின் தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் 23 படத்தில் இணைந்திருக்கிறார். இருவரின் காம்போவை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இப்படத்தை முடித்தவுடன் பாலிவுட்டுக்கு செல்லும் உள்ள ஏ.ஆர்.முருகதாஸ், அங்கு சல்மான் கானை வைத்து ஓர் படம் இயக்கவுள்ளார். அப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, கரீனா கபூர் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கவுள்ளனர். இப்படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளர்.