திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது பிரபல சைவ உணவகமான அன்னபூர்ணா உணவகம் இந்நிலையில் இன்று மதியம் இவ் உணவகத்தில் திருப்பூரை சேர்ந்த எல் ஐ.சி குழுவினர் 20 ககும்.மேற்பட்டோர் உணவருந்திய போது.
அதில் ஒரு பெண்மணிக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதனையடுத்து உணவக ஊழியர்களிடம் புகார் தெரிவிக்க அவர்கள் முறையான பதில் அளிக்காமல், அலட்சியமாக இருந்ததால் , உணவகத்தில் ஊழியர்கள் மற்றும் உணவக நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு,
சாம்பாரில் விழுந்த கரப்பான் பூச்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்பொழுது அந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரபல உயர்தர சைவ உணவகத்தில் உள்ள சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் உணவருந்த வந்த பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.