News சினிமா

விடாமுயற்சி படத்திற்கு பட்டு வேட்டி, சட்டையில் அஜித் வேண்டுதல்..?

  • June 17, 2024
  • 0

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித் குமார், இவர் திருப்பதி கோவிலுக்கு இன்று காலை சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் தற்போது இரண்டு படங்களில் பிசியாக நடித்து

விடாமுயற்சி படத்திற்கு பட்டு வேட்டி, சட்டையில் அஜித் வேண்டுதல்..?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித் குமார், இவர் திருப்பதி கோவிலுக்கு இன்று காலை சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் தற்போது இரண்டு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதில் ஒரு படம் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் முடிவுக்கு வந்தது.

அஜித்தின் இன்னொரு படம் விடாமுயற்சி இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் அர்ஜுன், ஆரவ், ரெஜினா என மிகப்பெரிய பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இம்மாத இறுதியில் விடாமுயற்சி சூட்டிங்கிற்கு வெளிநாடு செல்ல உள்ளது படக்குழு, வெளிநாடு செல்லும் முன்பாக திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகர் அஜித் குமார். திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலுக்கு சென்ற அஜித், விஐபி தரிசன் நேரத்தில் சாமி தரிசனம் செய்துள்ளார். பட்டு வேட்டி, சட்டை அணிந்து மாஸ் லூக்கில் கோவிலுக்கு சென்றிருந்தார். ரசிகர்கள் அஜித்துக்கு பெருமாள் சிலை ஒன்றை பரிசாக அளித்தனர்.