தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் அக்.6 இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அல்லோலகல்லோலப்படும் தமிழ்நாட்டு அரசியலில் வலுக்கட்டாய இடைத்தேர்தல்கள் உருவாகி இருந்தன. வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்கள் பதவி விலகி தவெகவில் இணைந்தது இதற்கான முதன்மை காரணமாக இருந்தது.
தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் 5 தொகுதிகளுக்கான வழக்கு நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மீதமுள்ள 2 தொகுதிகளான தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அக்டோபர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அக்டோபர் 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
முக்கிய தேதிகள்:
மனுத்தாக்கல் தொடக்கம் – செப்டம்பர் 09
மனுத்தாக்கல் நிறைவு – செப் 16
வேட்பு மனு பரிசீலனை – செப் 17
வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள் – செப் 19
வாக்குப்பதிவு – அக்டோபர் 06
வாக்கு எண்ணிக்கை – அக். 09