தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி சரத்குமார் நதி பாயும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர் சனத்குமார் நதி ஓடக்கூடிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டேன் இந்தப் பகுதிகளில் வயல்வெளிகள் இல்லை நதி என்பது இல்லை வத்தல் மலையிலிருந்து மழை காலங்களில் வரக்கூடிய தண்ணீர் சுமார் 46 கிலோ மீட்டர் பயணித்து தெண்பெண்ணை ஆற்றில் கலக்கிறது இது துணை நதி. தற்பொழுது குட்டை போல காட்சியளிக்கிறது மூன்று இடங்களில் ஆய்வு செய்தேன்.
தனியார் அமைப்பு அதனை சுத்தம் செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர் பிளாஸ்டிக் கழிவுகள் சாக்கடை கழிவுகள் அதிகம் காணப்படுகிறது டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகளை எடுக்க முடியும் தருமபுரி நகர பகுதியில் வசிக்கும் மக்களின் கழிவு நீர் குப்பைகள், சாக்கடை நீரால் நிறைந்துள்ளது. ஒரு காலத்தில் இந்த நதியை குடிப்பதற்காகவும் பயன்படுத்தியுள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி குப்பைகளை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும். 8 செக்டேம் உள்ளது. கூடுதலாக செக்டேம் கட்ட வேண்டும்.
சனத்குமார் நதியை சுத்தம் செய்து குப்பைகளை அகற்றி கழிவு நீரை சுத்தம் செய்து ஆற்றில் கலக்க செய்ய வேண்டும் அரசாங்கம் சனத்குமார் நதியை சுத்தம் செய்ய திட்டங்களை வகுத்துள்ளனர் ஆனால் நிதி ஒதுக்கவில்லை. அரசாங்கம் உடனடியாக இதற்கு நிதி ஒதுக்க வேண்டும். கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட அளவீடு செய்தது குறித்த கேள்விக்கு தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனை.
மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் வறண்டு விடும். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். கண்டிப்பாக கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட கூடாது என்றார்.
இந்நிகழ்ச்சியின் போது மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன், கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.