15/07/2026
தமிழ்நாடு

அதிமுகவை அழிவின் பாதைக்கு தள்ளியவர் டிடிவி தினகரன் – மாணிக்கம் தாகூர்

  • July 14, 2026
  • 0

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற பின்பு முதல்முறையாக மதுரை வருகை தந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூருக்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- காங்கிரஸ் தலைவர்

அதிமுகவை அழிவின் பாதைக்கு தள்ளியவர் டிடிவி தினகரன் – மாணிக்கம் தாகூர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற பின்பு முதல்முறையாக மதுரை வருகை தந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூருக்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;-

காங்கிரஸ் தலைவர் கார் கேக், ராகுல் காந்தி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்னை பொறுத்த அளவில் இது முக்கிய காலகட்டத்தில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு பெற்று இரண்டு அமைச்சர்கள் அமைச்சரவையில் உள்ளனர். அடுத்த வாரம் பாராளுமன்ற தேர்தல் மிக முக்கியமானது இந்த தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக வேண்டும் எனும் நோக்கத்தோடு மட்டுமே எங்களின் செயல் திட்டம் இருக்கும்.

இந்த அரசின் வெற்றிகளும் செயல்பாடுகளும் குறிப்பாக முதல்வர் கூட்டணி செயல்பாடுகள் மக்களை முதன்மையாகக் கொண்ட அரசியல். ஒவ்வொரு தமிழருக்குமான அரசியலாக புதுமையாக எடுத்து செல்கிறார். அதனால் இந்த அரசியல் வெற்றி எங்களுடைய வெற்றியாக இருக்கும்.

மேகதாது மத்திய அரசு அனுமதி இல்லாமல் தமிழக அரசின் ஒத்தாசை இல்லாமல் அமைக்க முடியாது. சட்டபூர்வமாக மத்திய அரசு தமிழகத்தில் பாஜக தோல்வியுறுவதன் வெறுப்பு அதன் மைய கருத்தாக பாஜகவிற்கு ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்துள்ளார்கள் அதற்காக தமிழகத்தை பழி தீர்க்கக் கூடாது அதற்கு அனுமதி வழங்கக் கூடாது.

புத்தாண்டு வேலை செய்வதை எல்லாம் கர்நாடக அரசு காட்டலாம் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் அதை நடத்த முடியாது.

பாஜக, ஆர் எஸ் எஸ்காரர்கள் ராமர் கோவில் உண்டியலில் கையை வைத்து விட்டார்கள். பாஜகவினர் உண்டியல் களவாணிகள் என்பது தெரிந்துள்ளது. ஆர்எஸ்எஸ் காரர்கள் கோவில் காசு கலவண்டு தான் அரசியல் செய்கிறார்கள் என்பது வெளியே வந்துவிட்டது பிடிபட்ட திருடர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள் ஆனால் பிரதமர் மோடி கோவிலை திறக்க வந்தார். இப்போது திருட்டு நடந்துள்ளது அதைப்பற்றி வாயை திறக்கவே இல்லை. ராமர் கோவிலில் திருட்டு நடந்திருப்பதை பாஜகவினர் வாய் திறக்காதவர்கள் குறித்து பாராளுமன்றத்தில் நிச்சயம் பேசுவோம்.

ராமருகே நீதி வாங்கும் நிலையில் இருக்கிறோம். பாஜகவிற்கு எல்லாமே வியாபாரம் பணம் வசூல் இதுதான் அவர்களின் வழக்கம். இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.

அண்ணன் டிடிவி அவர்களை பொறுத்த அளவில் எல்லாத்தையும் ஒருங்கிணைக்கும் வேலையை பார்க்கிறார். அதிமுகவை ஒன்றும் இல்லாமல் ஆக்கும் பொறுப்பு அவருக்குத்தான் சேரும். இதே கருத்தை அவர் அதிமுகவை ஒருங்கிணைக்க பண்ணியிருக்கலாம் எம்ஜிஆர் தொடங்கி ஜெயலலிதா காப்பாற்றிய கட்சி இந்த சூழலுக்கு வந்திருக்காது.

அவர் செய்த வேலை தான் 17 பேரை தெருவில் நிப்பாட்டி அதிமுகவை அழிவின் பாதைக்கு அழைத்துச் செல்வதற்கான பாதைக்கு எடுத்துச் சென்றுள்ளது முதலில் அதிமுகவை ஒருங்கிணைக்க பார்க்கட்டும். அதற்குப் பிறகு ஒருங்கிணைப்பதை பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *