15/07/2026
தமிழ்நாடு

தமிழக முதல்வரை கடுமையாக சாடிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

  • July 13, 2026
  • 0

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு நீங்கள் வந்ததே ஒரு பெரிய விஷயம். சட்டமன்றம் சந்தைக்கடையாகிவிட்டது திரைப்படத்தில் பேசும் வசனம் வேறு சட்டமன்றத்தில் பேசும் வசனம் வேறு – தமிழக முதல்வரை கடுமையாக சாடிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை

தமிழக முதல்வரை கடுமையாக சாடிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு நீங்கள் வந்ததே ஒரு பெரிய விஷயம். சட்டமன்றம் சந்தைக்கடையாகிவிட்டது திரைப்படத்தில் பேசும் வசனம் வேறு சட்டமன்றத்தில் பேசும் வசனம் வேறு – தமிழக முதல்வரை கடுமையாக சாடிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க பேரவையின் தலைவர் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருக்கக்கூடிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கிய நிலையில் சிறப்புரையாற்றினர்

முன்னதாக நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னர் வரிசையாக தொண்டர்களும் நிர்வாகிகளும் மாவட்ட செயலாளர் மற்றும் தொழிற்சங்க பேரவை தலைவர் செயலாளர் ஆகியோருக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து சால்வை அணிவித்த நிலையில்

தனக்கே உரித்த பாணியில் தலைவா கொஞ்சம் நிறுத்துங்க தலைவா இவ்வளவு சூழ்நிலையிலும் இந்த கூட்டத்திற்கு நீங்கள் வந்து ஆதரவு கொடுப்பதை பெருசு என்று தனக்கே உரிய பாணியில் கலகலவென பேசி ஆலோசனைக் கூட்டத்தை தொடங்கி வைத்தார்

ஆலோசனைக் கூட்டத்தின் போது ராஜன் செல்லப்பா மற்றும் ஆர்பி உதயகுமார் ஆகியோரின் பேச்சிற்கு பிறகு தனது பேச்சை தொடங்கிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மேடையில் பேசுகையில்

கொள்கை பிடிப்போடு இவ்வளவு நேரமும் தொழிற்சங்க நிர்வாகிகளால் மட்டுமே தான் எடுக்க முடியும்

இத்தனை சால்வைகள் அணிவிக்கப்படத் தேவையில்லை

கழகத்திற்கு எழுச்சி தான் தேவை
இனி உங்களுக்கு வலு சேர்பது தான் அதிமுகவின் வேலை

உங்களுக்கு எந்தத் பிரச்சனை என்றாலும் சொல்லுங்கள் நாங்கள் வருகிறோம்

நிர்வாகிகளுக்கு ஒன்று என்றால் நிச்சயமாக மதுரை மாநகர் புறநகர் கிழக்கு மேற்கு நிர்வாகிகள் வருவோம் …

தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கின்றோம் ….

இந்த ஆட்சி எப்போது போகும் என்றுதானே நீங்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் ??.

அதிமுக விட்டு செல்பவர்களை குறித்து அதிமுக என்றும் கவலைப்படாது …

எனது இளமை காலத்தில் இருந்து நான் உள்ளதை சொல்பவன்

சதா மதுரை மக்களின் நலனை பற்றி தான் நாங்கள் பேசி இருக்கின்றோம்

ஆனால் எதுவுமே செய்யாமல் தற்போது தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்து அவர்கள் சட்டமன்றத்திற்கு சென்ற பிறகு என்ன பேசுகிறோம் என்று அவர்களுக்கே தெரியவில்லை ..

இளைய தலைமுறையை பாலடித்துக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர்

ஒரு நடிகராக பேசுவது வேறு சட்டமன்றத்தில் பேசுவது என்பது வேறு நாகரிகமாகத்தான் சட்டமன்றத்தில் பேச வேண்டும் ….

சட்டமன்றம் தற்போது சந்தை கடை ஆகி விட்டது ….

தமிழக முதல்வர் அவர்களே நீங்கள் என்ன யோக்கியனா ….

முதல்வர் அவர்களே உங்களை பார்த்து நான் கைநீட்டி சவால் விடுகிறேன் ( ஆவேசமடைந்த செல்லூர் ராஜு )

திரைப்பட த்தில் வரி ஏய்ப்பு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த சொகுசு கார் இப்படியாக …..

கரூர் சம்பவத்தில் பாதி கடந்தவர்களுக்கு அரசு பதவி கொடுத்திருக்கிறீர்கள் வரவேற்கின்றோம்

இதற்கு முன்பு இருந்த பத்து நபர்களுக்கு என்ன செய்தீர்கள் ….

முதலமைச்சர் விஜய் அவர்களே உன்னை பார்த்து கேட்கிறேன்

இயற்கை பேரிடர் சாலை விபத்து இப்படி இறந்து போகக் கூடியவர்களுக்கு அரசு வேலை கொடுப்பீர்களா ??

அரை முட்டாள் தனமாக அரை வேக்காட்டுத்தனமாக செய்துவிட்டு

ஓடு ஓடு என்று சொல்லும் நீங்கள் தான் ஓட வேண்டும் அரசியலை விட்டு ஓட வேண்டும்

இந்த இயக்கத்தை விட்டு சென்றவர்கள் குறித்து நான் பேச விரும்பவில்லை சென்றவர்கள் மீண்டும் கூட வரலாம் ….

30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்தது தான் அதிமுக, பிராமண பெண்ணாக இருந்து 69 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தது அதிமுக, விஜய்க்கு ஆதரவாக செயல்படக்கூடியதாக இருக்கக்கூடிய ஊடகங்களை சுட்டிக்காட்டி தொடர்ந்து விஜய் குறித்து விமர்சனம் …. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

இந்தப் பதவி என்பது நாளையே போய்விடும் ….
விஜய் ஒன்றும் கவர்ச்சியாக கிடையாது. பார்ப்பவர்கள் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள் தான் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும். ஜால்ரா அடிப்பவர்கள் ஒவ்வொரு கட்சியிலும் இருக்கிறார்கள்

தொழிற்சங்கம் ஆரம்பிப்போம் என்று யாரும் அழைத்தால் செல்ல வேண்டாம் அங்கு எதுவும் கிடையாது. தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு துணையாக இருப்பது என்றுமே அதிமுக ஒன்று தான். ஆலோசனை கூட்டத்தில் தனது உரையை நிறைவு செய்தார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *