02/07/2026
News அரசியல் தமிழ்நாடு

அப்பாவை அங்கு தேடாதீர்கள்: முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

  • June 25, 2026
  • 0

தமிழ்நாடு உள்ளவரை நான் தான் முதலமைச்சர் என்று அண்ணா சொன்னதைப் போல, மகளிர் உரிமை திட்டம் இருக்கும் வரை இந்த ஸ்டாலின் தான் முதல்வர்

அப்பாவை அங்கு தேடாதீர்கள்: முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

திருவாரூரில் திமுக பிரதிநித் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அப்பா குறித்து பேசிய பேச்சுக்கு பதில் கொடுத்திருக்கிறார்.

அவர் பேசியதாவது,

”நாட்டில் மின்வெட்டுப் பிரச்சனை, டெல்டா மாவட்டத்தில் குறித்த நேரத்தில் விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்க முடியவில்லை என்பது பிரச்சனைகள் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் குறித்த நேரத்தில் மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளோம்.

இவற்றையெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் எடுத்துச் சொல்லி பேசினார். ஆனால் முதலமைச்சராக உள்ளவர் எங்கே உங்கள் அப்பாவை காணோம் என்றார். அப்பாவை அங்கே தேடாதீர்கள் மக்கள் மனதில் பதிந்திருக்கிறார்.

சட்டமன்றத்தில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்திலே நான் இருக்கிறேன் என்பதை உங்களிடத்தில் கூறிக் கொள்கிறேன். கடந்த 60 வருடங்களாக மக்களோடு மக்களாக தான் பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முதல்வராக இருந்தபோது சென்றிருக்கிறேன் நான் ஆய்வு கூட்டம் நடத்தியதை போல யாரும் செய்திருக்க மாட்டார்கள், கோட்டையில்தான் கோப்புகள் உள்ளன அந்த கோப்புகளை எடுத்துப் பாருங்கள்,
மகளிருக்கு கலைஞர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.

புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000 வழங்கப்படும், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்களில் எல்லாம் நான் கையெழுத்து இட்டுள்ளேன் அங்கெல்லாம் நான் இருக்கிறேன். என்னை தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மக்களோடு தான் இருக்கிறேன். அண்ணா தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது ஒன்றே போதும்.

இந்த தமிழ்நாடு உள்ளவரை நான் தான் முதலமைச்சர் என்று சொன்னதைப் போல, மகளிர் உரிமை திட்டம் இருக்கும் வரை இந்த ஸ்டாலின் தான் முதல்வர், கருணாநிதி கூட்டணி அமைத்தால் வைத்திருப்பார், அவர்களாகத்தான் போனால் போவார்கள் தவிர, வெளியேற்ற மாட்டார். அந்த வழியில் தான் நான் கூட்டணியை பாதுகாத்தேன். ஆனால் கூட்டணியே வேண்டாம் எனவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதனையும் பரிசீலிப்போம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *