News இந்தியா

இந்தியாவிலேயே புதுச்சேரியில் மட்டும் அதிக சைபர் குற்றங்கள்..! – அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்

  • June 20, 2025
  • 0

இந்தியாவிலேயே சைபர் குற்றங்கள் அதிக அளவில் நடக்கும் கேந்திரமாக புதுச்சேரி மாநிலம் திகழுவதாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார் இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர்….. புதுச்சேரியில் பல கோடி ரூபாய்

இந்தியாவிலேயே புதுச்சேரியில் மட்டும் அதிக சைபர் குற்றங்கள்..! – அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்

இந்தியாவிலேயே சைபர் குற்றங்கள் அதிக அளவில் நடக்கும் கேந்திரமாக புதுச்சேரி மாநிலம் திகழுவதாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்

இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர்…..

புதுச்சேரியில் பல கோடி ரூபாய் மோசடி செய்த தனியார் நிறுவனத்தில் விளம்பரத்தில் நடித்த இரண்டு தமிழ் நடிகைகளுக்கு சைபர் க்ரைம் சம்மன் அனுப்ப வேண்டும் என்று திமுகவின் கோரிக்கையை ஏற்று தற்போது அந்த இரண்டு நடிகைகளுக்கும் சைபர் க்ரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர் இது ஏற்புடையதல்ல.

சைபர் கிரைம் மோசடியில் அதிகபட்சமாக அரசு ஊழியர்கள் ஏமாறுகின்றனர். அவர்களுக்கு கோடி கணக்கில் பணம் எங்கிருந்து வந்தது என்பதை முதலில் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தியாவிலேயே சைபர் குற்றச்செயல் அதிகம் நடக்கும் மாநிலம் புதுச்சேரி தான் என்று குற்றம் சாட்டிய அன்பழகன்,புதுச்சேரியில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் சைபர் க்ரைம் பிரிவை டிஜிபி உருவாக்க வேண்டும்.

துணைநிலை ஆளுநர் ஆன்மீக சுற்றுலா தளமாக புதுச்சேரியை மாற்றுவோம் என கூறியுள்ளார். இந்து, கிறிஸ்தவர்கள் வழிபாட்டு தலங்களில் ஆடை கட்டுப்பாட்டை துணைநிலை ஆளுநர் அவர்கள் கொண்டுவர வேண்டும். குறிப்பாக இதுபோன்ற வழிபாட்டு தலங்களில் அரைகுறை ஆடைகளுடன் உள்ளே வரும் நபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட வேண்டும். அதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநர் பிறப்பிக்க வேண்டும் என்று அன்பழகன் கேட்டுக்கொண்டார்.