வக்ஃப்: அவசரத்தில் ஆவணப்படம்… அம்பலப்பட்ட பாஜக
- March 27, 2025
- 0
இதற்கு வக்பு வாரியம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தடை நீக்கப்பட்டுள்ளது என்பதை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கு வக்பு வாரியம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தடை நீக்கப்பட்டுள்ளது என்பதை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்பை விட த் தீவிரமாக, காட்சிமொழி விளையாடும் காலமாக இருக்கிறது அண்மைக்கால அரசியல் களம்.
வீடியோக்கள், வீடியோக்கள் வழியாகவே பதில்கள், திடீர் விளக்க வீடியோக்கள், திரிக்கப்பட்ட வீடியோக்கள் என அண்மைக்கால அரசியல், கொரோனாவுக்குப் பிறகு கொடிகட்டிப் பறக்கிறது வீடியோ விளையாட்டில்.
அந்த வரிசையில், வலிமையான சமூகவலைதள கட்டமைப்பும் வார் ரும்களும் இருப்பதால், எக்கோ சேம்பர் நிரல்முறைமையை (Echo Chamber Algorithm) சிறப்பாக கையாளுகின்றது பாஜக. அதன் ஒரு பகுதியாக தற்போது வக்ஃப் போர்டு தொடர்பான வெறுப்பு பிரசார வீடியோ (ஆவண(?)ப்படம்) ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
பாஜக முன்மொழிந்துள்ள, வக்ஃப் போர்டு திருத்தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில், நேரடியாக முஸ்லிம்கள் மீது விரோதம் வளர்க்கும் உள்நோக்கத்துடன், கருத்துகள் தெரிவிக்கப்படும் அந்த வீடியோவில், ஆதாரம் என்னும்படிக்கு பிபிசி வெளியிட்ட செய்தி ஒன்றும் காட்டப்பட்டது. அங்குதான் சிக்கியது பாஜக.
அவசரத்தில் வெட்டி ஒட்ட, அந்த தலைப்பு மட்டும் போதுமானதாக இருந்ததோ என்னவோ, முழுமையாகப் படிக்காமல் வெட்டி ஒட்டிவிட்டனர். அந்த செய்தியை முழுமையாகப் படித்தால் அதிலேயே தெளிவும் இருக்கிறது.
சரி என்ன பிரச்னை என்பதை முதலில் சுருக்கமாக புரிந்து கொள்ளலாம். இஸ்லாமியர்களின் சொத்துகள் அல்லது இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட சொத்துகள் ஏற்கனவே பலரிடம் இருந்து வாங்கி விற்று கைமாறிய நிலையில், வக்ஃப் போர்டு உருவாக்கப்பட்ட பிறகு அவற்றை அடையாளம் கண்டு, கையாளுவதில் சிரமங்கள் ஏற்பட்டன.
அந்த வகையில், வக்ஃப் சொத்து என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் சொத்துகளை விற்பதானால், வக்ஃப் வாரியத்திடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என்பது விதி. இந்த நிலையில், தலைமுறை தலைமுறைகளாக பாத்தியத்தில் இருந்து வருவோருக்கு இதிலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டி கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.
இதை மையப்படுத்தித்தான் பாஜக அந்த ஆவணப்படம் என்ற குப்பையை வெளியிட்டது. அதில், “நாங்க கோயில் நுழைவாயில் கட்ட முடியல”, “ நாங்க இந்துக்கள், சாமி கும்புடாம இருக்க முடியுமா“ “நாங்க உழைச்சு சம்பாதிக்குறோம், அவங்க (முஸ்லிம்கள்) அடிச்சு சம்பாதிக்குறாங்க” என்ற வசனங்களும் உள்ளன. மொத்தமே 3 நிமிடம் கூட தாண்டாத இந்த வீடியோவுக்குள் தான் இத்தனையும் வன்மமும் அடுக்கடுக்காக பேசப்படுகிறது.
என்ன நடந்தது?
கடந்த 2022ஆம் ஆண்டு, திருச்சி அருகே உள்ள திருச்செந்துறை உள்ளிட்ட கிராமங்களில் வக்ஃப் நிலம் தொடர்பான சர்ச்சை எழுந்தது. அப்போதே, திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் இந்த விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “24 கிராமங்களுக்கும் பத்திரப்பதிவு செய்யலாம் என்ற புதிய அரசாணை வெளியிடப்பட்டு விட்டது. நேற்றே பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு விட்டது” என்று தெரிவித்தார்.
மீண்டும் உறுதி
2024 ஆம் ஆண்டு மீண்டும் இதனையிட்டு, போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், இதற்கு வக்பு வாரியம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை தடை நீக்கப்பட்டுள்ளது என்பதை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
திருச்சி திருச்செந்துறை கிராமத்தில் 389 ஏக்கர் பரப்பளவில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடம் என முறையிடப்பட்டது. பத்திர பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் அனைவரும் தொடர் போராட்டங்களை நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை இறுதியில், திருச்செந்துறை கிராமத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு எந்த தடையும் இல்லை நிலங்களை வாங்கவும் விற்கவும் செய்யலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அடையாளத்தை முன்வைத்து, அவர்கள் மீது வெறுப்பு உண்டாக்கும்படியான காட்சிகளையும் வசனங்களையும் ஒரே 10 பேரைக் கொண்டு திரும்ப திரும்ப பேச வைத்து, அவற்றுள் வெறுப்பு அரசியல் வாதங்களை மட்டும் தொகுத்து அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அவசர அவசரமாக இப்படி ஒரு பொய்யை எக்கோ சேம்பர் மூலம் பரப்பிவிட முடியும் என்ற நம்பிக்கை தான் இத்தனைக்கும் அடிப்படை. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்.