News நூலாயணம்

தமிழ்ச்செல்வி எழுதிய கண்ணகி – நூலாயணம் – பகுதி 1

  • November 4, 2024
  • 0

"வாகான நுகத்தடி கிடைத்தால் இழுத்து பூட்டிக் கொள்ளும் பருவமாக இருந்தது அவள் பருவம்… " இந்த ஒற்றை வரியில் இருந்து தான் கண்ணகி நாவலின்...

தமிழ்ச்செல்வி எழுதிய கண்ணகி – நூலாயணம் – பகுதி 1

“வாகான நுகத்தடி கிடைத்தால் இழுத்து பூட்டிக் கொள்ளும் பருவமாக இருந்தது அவள் பருவம்… ” இந்த ஒற்றை வரியில் இருந்து தான் கண்ணகி நாவலின் ஒட்டுமொத்தக் கதைக்களமுமே பின்னப்பட்டுள்ளது.

‘ஸ்டான்லிஹால்’ என்ற மனநல ஆலோசகர் தான் சொல்லுவார், “வளர் இளம் பருவம் என்பது, புயலும் அழுத்தமும் நிறைந்த பருவம் அப்பருவத்தை மிகுந்த கவனத்தோடு கையாண்டவர்கள் வாழ்க்கை யில் துன்பங்களுக்கு இடம் அளிக்காமல் வாழ முடியும்” என்று. அக்கூற்று இந்நாவலில் கண்ணகியின் வழியே நிரூபணம் ஆகி இருக்கிறது.

இந்நாவலின் கதாநாயகியான கண்ணகி 13 வயதில் தான் எடுத்த விபரீதமான முடிவின் காரணமாக வாழ்நாள் முழுவதும் அலைக்கழிக்கப்படுகிறாள். தனக்கான சுயத்தை தேடி ஒவ்வொரு நாளும் அவள் படும் பாடு புத்தகம் நெடுகிலும் நீங்கள் காணலாம். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சக மனிதர்களின் மீது அவள் அன்பு காட்டுவதை மட்டும் மாற்றிக் கொள்ளவே இல்லை என்பதே அவளின் தனிச் சிறப்பு.

தன்னை அடுத்து இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டது மட்டுமல்லாது அவளது இளமை க் காலம் முழுவதும் அவளைத் துன்புறுத்திய கணவனை அவன் இறக்கும் தருவாய் வரை இவளே கவனித்துக்கொண்டாள் என்பதை வாசிக்கும்போது பெண்கள் சற்றே வித்தியாசமானவர்கள் என்றே எனக்குத் தோன்றியது. இந்நாவலில் வரும் பெண்கள் நிறை ய பேசுகிறார்கள். தங்களின் பேச்சுக்களின் வழியே தங்களின் துக்கங்களை தாண்டிச் செல்ல ஆசைப்படுகிறார்கள். கதாநாயகியான கண்ணகி தன்னுடை ய கஷ்டகாலத்தில் உதவியவர்களை எண்ணி என்றும் நன்றியுள்ளவளாக இருக்கிறாள்.

இந்நாவலில் 29 ஆவது பக்கத்தில் என்னை வியப்பில் ஆழ்த்திய ஒரு பத்தி வருகிறது. அது என்னவெ ன்றால், “விபசித்தர் முனிவர் இந்தக்கோயிலை கட்டியபோது வேலை செய்த ஆட்களுக்கு இந்த வன்னிமரத்தின் இலைகளைப் பறித்து துணியில் முடிந்து கூலியாக கொடுப்பாராம். அதை வீட்டில் கொண்டு போய் பிரித்துப் பார்த்தால் அவரவர் செய்த வேலைக்கு தகுந்தாற்போல் அது பணமாக மாறி இருக்குமாம். அது போன்றதொரு நிலை இன்றைக்கும் இருந்தால் எப்படி இருக்கும்?

உடல் வருத்தி உழைப்பவர்கள் சோறில்லாமல் தூங்க வேண்டியிருக்காது. உழைக்காமல் சம்பளம் வாங்கும் உத்தியோகக்காரர்கள் வீட்டில் சருகு தான் பறக்கும். உழைப்பாளிகள் சுரண்டப்படுவதையும் ஏமாற்றப்படுவதையும் எவ்வளவு அழுத்தமாக வாசிப்பாளர்களிடம் கடத்த முடியுமோ அதை எளிமையாகக் கையாண்டு செயல்படுத்தியிருக்கிறார் எழுத்தாளர் தமிழ்செல்வி.

தனது உழைப்பைக் கொண்டு முன்னேறிய கண்ணகி மேற்சொன்ன கூற்றுக்கு சான்றாய் இந்நாவல் எங்கும் உலா வருகிறாள். அவள் எப்படி உழைப்பைத் தனக்கான சாதனமாக மாற்றினாள் என்பதை நண்பர்கள் இப்புத்தகத்தை வாசிப்பதின் வாயிலாக தெ ரிந்து கொள்ளலாம்…

நூல்நயர்
வா. ஸ்டாலின்,
விரிவுரையாளர்,
இராமநாதபுரம்