மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகள் என்ற பொதுப்பெயரில் வெளியிடப்பட்ட கொள்கைகள் என்னென்ன என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
ஜனநாயகம்:
ஒரு நாட்டின் மக்களை அவர்கள் சார்ந்த இனம், மதம், மொழி, சாதி, பாலினம் என்று பிரித்து பாகுபடுத்தாமல் சம உரிமைகளை அவர்களுக்கு உத்தரவாதப்படுத்தி சாத்தியப்படுத்துவது.
ஆட்சி அதிகாரம்:
அரசு இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்தி வெகுஜன மக்களின் அடிப்படை சுதந்திர உரிமைகளை பறிக்கும் மாநில ஒன்றிய ஆட்சியாளர்களின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்து மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை நாங்கள் நிலைநாட்டுவது.
சமதர்ம சமூக நீதி:
இட ஒதுக்கீடு அல்ல, விகிதாச்சார இடப் பங்கீடே உண்மையான சமூக நீதிக்கு வழி வகுக்கும். ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சாதி முழுவதுமாக ஒழிக்கப்படும் காலகட்டம் வரை அனைத்து பிரிவினருக்கும், அனைத்து துறைகளிலும் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்குவது.
சமத்துவம்:
சாதி, மதம், இனம், நிறம், மொழி, பொருளாதாரம், வர்க்கம் மற்றும் பாலின சமத்துவத்துக்குரிய உரிமை. எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் எல்லா வகைகளிலும் மற்றவர்களுக்கு சமமானவர்களே என்பது நம்முடைய சமத்துவம்.சமத்துவம்…
மதசார்பின்மை:
மதசார்பற்ற, தனிப்பட்ட மத நம்பிக்கையில் தலையீடற்ற, அனைத்து மதத்தினரையும், மத நம்பிக்கையற்றவரையும் சமமாக பாவிக்கும் அரசு, ஆட்சி நிர்வாகம்தான் நம்முடைய மதசார்பின்மை கொள்கை.
மாநில தன்னாட்சி உரிமை:
மாநில தன்னாட்சி உரிமையை அந்தந்த மாநில மக்களின் தலையாய உரிமை. மாநில தன்னாட்சிக்கு உட்பட்ட உரிமைகளை மீட்பது என்பது தமிழக வெற்றி கழகத்தின் மாநில தன்னாட்சி உரிமையாகும்.
இரு மொழிக் கொள்கை:
தாய் மொழியாகிய தமிழ், உலகத்திற்கான இணைப்பு மொழியாகிய ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கையை தமிழக வெற்றி கழகம் பின்பற்றுகிறது. தமிழே ஆட்சி மொழி, வழக்காடு மொழி, வழிபாட்டு மொழி. தமிழ் மொழி கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
அரசியல் தலையீடற்ற பணி:
உரிமைகளை நிலைநாட்டும் நிர்வாகம் அரசுத்துறை மற்றும் தனியார் துறை இன்று எந்த துறையிலும் லஞ்ச ஊழலற்ற நிர்வாகத்தை நாம் கொண்டு வருவோம். மத, இன, மொழி, வர்க்க பேதமற்ற வகையில் கல்வி சுகாதாரம் தூய காற்று தூய குடிநீர் என்பது எல்லோருக்கும் அடிப்படை உரிமை.
சுற்றுச்சூழல்:
இயற்கை வளங்கள் ஆகியவற்றை பாதுகாப்பது அரசின் தலையாக கடமை.
பகுத்தறிவு சிந்தனை மனப்பான்மை:
மனித குலத்தின் உடல் மன நலனுக்கு கேடாகும் பிற்போக்கு சிந்தனைகளை நிராகரிப்பது.
தீண்டாமை ஒழிப்பு:
பழமைவாத பழக்க வழக்கங்களை நிராகரிப்பதே தீண்டாமை ஒழிப்பின் முதல் படியாகும்.
இயற்கை வள பாதுகாப்பு:
சூழ்நிலை மற்றும் காலநிலை நெருக்கடி எதிர்கொள்ளக்கூடிய இயற்கைக்கு ஊறு விளைவிக்காத பகுதி சார் மாநில வளர்ச்சி பரவலாக்கம்.
போதையில்லா தமிழகம்:
உற்பத்தித்திறன் உடல் மற்றும் உள்ள நலன் கிடக்கும் சமூக சீர்கேட்டுக்கு வழி வகுக்கும் போதை அறவே இல்லாத தமிழக படைத்தல் தமிழக வெற்றி கழகத்தின் அடிப்படை கொள்கைகள் ஆகும்”.
1 Comment
[…] […]
Comments are closed.