பிரதமர் மோடி கடந்த 2023ஆம் ஆண்டு, அமெரிக்கா சென்ற போது இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான இஸ்ரோ- நாசா கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் அங்கீகாரம் பெற்ற ஆக்ஸியமுடன் (AXIOM) இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி இந்திய வீரர்கள் 2 பேர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல உள்ளனர். இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 4 விண்வெளி வீரர்களை தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் கேரள மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி, ககன்யான் திட்டத்தில் பங்கேற்கும் 4 வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
அந்த 4 வீரர்களுக்கும் ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. சுபஹான்சு சுக்லா மற்றும் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் ஆகிய இரண்டு பேரும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விண்வெளிக்கு பயணிக்கவுள்ள இவ்விருவருக்குமான பயிற்சிகள், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. இஸ்ரோவின் மனித விண்வெளி விமான மையம் (HSFC) சுக்லாவை முதன்மை மிஷன் பைலட்டாக பரிந்துரை செய்துள்ளது. நாயர் காப்புப்பிரதியாக பணியாற்றுகிறார். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கான இறுதி ஒப்புதல் பலதரப்பு குழு ஆபரேஷன் பேனல் (MCOP) மூலம் வழங்கப்பட உள்ளது.