எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபு தேவா, சன்னி லியோன், விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பேட்ட ராப் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்த திரைப்படத்துக்கான
எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபு தேவா, சன்னி லியோன், விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பேட்ட ராப் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்த திரைப்படத்துக்கான விளம்பர நிகழ்ச்சி கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகை சன்னி லியோன், சமீபத்தில் மலையாள திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்.
அதில், “என்னால் இது தொடர்பாக என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து மட்டுமே பேச முடியும். மற்றவர்கள் தற்போது பேசும் வகையான தொல்லைகளை நான் சந்திக்கவில்லை.
நான் என் சொந்த அடையாளத்தையும், என் வேலையையும் முழுமையாக நம்புகிறேன். ஒரு படத்தில் நடிக்க எனக்கு அதிக சம்பளமோ, அல்லது வேறு ஏதாவது தேவை என நினைத்தால், அதற்காக நான் தொடர்ந்து குரல் கொடுக்கிறேன். எல்லோரும் அதையே செய்ய வேண்டும் என்றே விரும்புகிறேன்.
எது தவறு என தெரிகிறதோ, அதிலிருந்து NO எனக் கூறி விலகி நடக்க வேண்டும். நம் எல்லைகளை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இதற்கு முன்பு எனக்கும் பல கதவுகள் மூடப்பட்டிருக்கிறது. ஆனால், நான் என் சொந்த அடையாளத்தையும், என் தொழிலையும் ஆத்மார்த்தமாக நம்பினேன். அதனால், மூடப்பட்ட கதவுகள் எனக்கு ஒரு பிரச்னையாகவே தெரியவில்லை. இந்த மாபெரும் உலகில், ஒரு வாய்ப்பு இல்லாவிட்டால் என்ன, இன்னும் நூறு வாய்ப்புகள் நம் வழியில் வரும்.” எனக் கூறினார்.