15/07/2026
News தொடர்கள் நூலாயணம்

’விசில்’ நூல் வாசிப்பனுபவம்

  • April 4, 2026
  • 0

இவரின் எழுத்துப் பணி இன்றும் தொடர்கிறது. பல விருதுகளை பெற்றுள்ளார். இவரின் மற்ற புத்தகங்களை படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இயல்பாகவே ஏற்படுகிறது. வாழ்க எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ்

’விசில்’ நூல் வாசிப்பனுபவம்

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒரு குறிக்கோளுடன் பயணம் செய்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். வாழ்வியலின் ஒவ்வொரு கட்டத்திலும் புறச்சூழ்நிலைக்கு மற்றும் பெற்றோரின் விருப்பத்திற்கு எதிர்பார்பார்ப்பிற்குத் தள்ளப்படுகிறோம். பிறந்தது முதல் நமக்கான புரிதல் வரும்வரை நம்மைப் பெற்றவர்களின் விருப்பத்தை நிறைவு செய்கிறோம்.

நமக்கான புரிதல் வந்து நமக்குப் பிடித்ததை தேர்வு செய்யும்போது வீட்டார் நம்மை பார்க்கும் பார்வை வேறு,? இத்தனை நாள் நான் சொன்னதைத்தானே கேட்டாய் இனிமேல் நீ எப்படி முடிவெடுப்பது. நீ எடுக்கும் முடிவு சரியாக வருமா என்கிற வினாக்குள்ளேயே பலபேர் திறமைகள் விருப்பங்கள் மூழ்கடிக்கப்படுகின்றன. இந்த நூலின் எழுத்தாளரும் வீட்டின் முடிவிற்கு கட்டுப்பட்டு வாழ்க்கையை நகர்த்தியிருக்கிறார். சரி நூலுக்குள் வருவோம்…

இந்த நூல் திருநெல்வேலி மொழியுடன் தொடங்குகிறது. நூலாசிரியர் தனது பத்தாம் வகுப்பிலிருந்து தொடங்குகிறார். பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கவில்லை என்பதால் கிடைக்கும் ஏச்சுக்களுடன் தொடங்குகிறார்.

இவரின் அம்மா ஒரு ஆசிரியர். அவரின் விருப்பம் தன் மகள் தன்னைப் போல் விடைத்தாள் திருத்துபவராக வரக்கூடாது. ஒரு அரசு வேலையில் நல்ல சம்பளத்தில் அதிகாரியாக வரவேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன் இவரை இரயில்வே துறைக்கு விண்ணப்பம் அனுப்பச் சொல்கிறார்.
ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கும் எதிர்பார்ப்புதான் என்றாலும், குழந்தைகளின் விருப்பத்தை கேட்டுத்தான் முடிவு செய்யவேண்டும்.

எழுத்து என்பது உடனே வருவதல்ல. சிலரின் எழுத்து படிக்கத்தூண்டும், சிந்திக்கத்தூண்டும், நம்முடைய பழைய நினைவுகளை கண்முன் கொண்டுவரும்.
நிவேதிதா அவர்களின் எழுத்து நம்முடைய வாழ்க்கையின் பழைய நினைவுகளை கண்முன் கொண்டுவருகிறது. எழுத்தாளர் பத்தாம் வகுப்பு படித்து இரயில்வே துறையில் சேர்வதற்கு தேர்ந்து எடுக்கப்பட்டு சென்னை வந்து படித்துவிட்டு பணி ஆணைக்காக காத்திருக்கும்போது புடவை விற்றது, நடனம் சொல்லிக்கொடுத்தது, வந்த ஊதியத்தில் தனக்கு ஜிமிக்கி வாங்கிக் கொண்டதை பதிவு செய்கிறார்.
வாழ்க்கை வரலாறாக இருந்தாலும் அதனை நல்ல நடையில் தேவையான செய்திகளை மட்டுமே பதிவு செய்கிறார்.

முதன்முதலாக இவரிடம் கூடப்படிக்கும் ஒரு இளைஞன் தனது காதலைச் சொல்லி இவர் மறுத்ததால் விசம் அருந்தினாலும் அதற்கு இவர் மயங்காமல் இவரது அம்மா சொன்னதை நினைவில் வைத்து தனக்குப் படிப்புதான் முதன்மை காதல் கத்திரிக்காய் எல்லாம் கூடாது என உணர்ந்து அதனை பக்குவமாய் அந்தப் பையனுக்குப் புரிய வைக்கிறார்.
ஒரு பதினைந்து வயதில் ஏற்படும் உணர்வு எல்லோருக்கும் வரும். ஆனால், அதனை பக்குவமாக அணுகுவது எல்லோராலும் இயலாது. இவரின் பக்குவம் பாராட்டுக்குரியது.
தன்னுடைய ஒவ்வொரு தலைப்பிலும் எண்களை தலைப்பாக்கி அதனுள் என்ன செய்தி எழுதப்பட்டுள்ளது என்பதை படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறார்.

இவரது நினைவாற்றலை பாராட்டாமல் விடக்கூடாது. பயிற்சிப் பள்ளியில் பலகையில் எழுதும் எண்ணை பார்த்து நினைவுவைத்து திரும்பி நின்று அந்த வரிசையை அப்படியே சொல்ல வேண்டும். அந்த எண்களைப் பார்ப்போம் 42 75 31 66 89 28 15 93 07 38 57 16 45 84 63 71.

இவர் எப்படி அத்தனை எண்களையும் கண்ணால் உற்றுப்பார்த்து உள்வாங்கி அனைத்து எண்களையும் அப்படியே வரிசை மாறாமல் சொல்லி உள்ளார். நமது கண்கள் எப்பொழுதும் படங்களைத்தான் முதலில் மூளைக்கு அனுப்பும்
இவர் பணிநேரம் காலை 10 முதல் இரவு 8 மணிவரை. சில ஊர்களுக்கு மாற்றப்பட்டால் அங்கு காலை 6 மணிக்கு இருக்க வேண்டும் என்கிறார். அதனால் காலை உணவு சாப்பிட முடியாமல் பிஸ்கட்டும் பாலும் மட்டுமே சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு அடிக்கடி நின்ற இடத்திலேயே மயக்கம் அடைந்திருக்கிறார். இரவுப் பணி கிடைக்கும்போது இரவு 2 மணி முதல் 4 மணி வரை சற்று உறங்கும் வாய்ப்பு கூட வேலை செய்யும் சிலர் உதவி செய்தால் கிடைக்கும் என்று பதிவு செய்கிறார்.
பல தடவை உடல்நலக்குறைவு ஏற்பட்ட போதும் அவர் தன்னுடைய பணியில் கவனமாக செயல்பட்டிருக்கிறார்.
கடினமான பணிச்சுமையிலும் எண் கணிதம்; பற்றித் தெரிந்துகொண்டுள்ளார். கணவரின் உதவியால் தன்னுடைய பட்டப் படிப்பைத் தொடர்ந்து எம்.பி.ஏ. படிப்பில் தேர்வு பெற்றுள்ளார். இவரின் ஊக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது. பல பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

981****356 இந்த அலைபேசி எண்ணிற்கு சொந்தக்காரர் புலனாய்வுத் துறையில் வேலை செய்பவர். இவர் இந்த எண்ணை அதிசய எண் என்கிறார். செவ்விய வர்க்க எண் என்கிறார். 0 முதல் 9 வரையான எல்லா எண்களும் ஒருமுறை இடம்பெறும் செவ்விய வர்க்க எண் என்கிறார். இதனை பலமுறை ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்.
88க்கு ஒரு சிறப்பு உண்டு என்கிறார். கணிதத்தில் இது ஒரு தீண்டத்தகாத எண் . ருவெழரஉhயடிடந ரேஅடிநச. இந்த எண்ணை இடமிருந்து எழுதினாலும் வடமிருந்து எழுதினாலும் அதே எண்ணாக வரும். இரண்டாம் உலகப் போருக்கு காரணமாக ஹிட்லர் பயன்படுத்திய எண் என்கிறார்.

எல்லா இடங்களிலும் ஆண்கள் மற்றும் பெண்களும் பயன்படுத்தும் ஒரே ஆயுதம் தனக்கு உதவி செய்யும் ஆண்களுடன் எந்தப் பெண்ணும் கொஞ்சம் சிரித்துப் பேசினால் ஒரு கதை கட்டப்படும். இவரின் பலமுறை அதனை சந்தித்துள்ளார். கோழைகள்தான் முகத்திற்கு நேராக எதையும் பேசத் துணிவு இல்லாதவர்கள் செய்யும் வேலை. இதனை எல்லாப் பெண்களும் சந்தித்து குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிக அளவில் சந்திக்க நேர்கிறது.

நிவேதிதா லூயிஸ் அவர்களின் துணிவான செயலால் தொடர்வண்டித்துறையின் ஊழல் 2013இல் வெளிவந்துள்ளது. பாரதியாரின் அச்சமில்லை அச்சமில்லை பாட்டுத்தான் நினைவுக்கு வருகிறது. அந்த ஊழல் வெளிவந்ததால் இவரின் பதவி உயர்வு தடுக்கப்பட்டுள்ளது. உண்மையாக, நேர்மையாக பணிபுரிபவர்கள் சந்திக்கும் நிகழ்வுதான். ஒற்றை ஆளாக இவர் அதனை வெளிக்கொண்டுவர முயன்றது வியப்பளிக்கிறது. இந்த ஊழல் உண்மை வெளிவந்தால் தனது குடும்பம் பாதிப்புக்கு உள்ளானால் என்ன செய்வது என்று சிந்தித்திருந்தால் எதுவும் செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால் வருவது வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் எனும் துணிவு வியப்பூட்டுகிறது. ஊழல் எவ்வளவு தெரியுமா 12.600 கோடி.

ஊழல் வெளிக்கொண்டு வந்தத்துறையிலேயே விஜிலன்ஸ் வேலை கிடைத்தும் தொடர்வண்டித்துறையை விட்டு விலகாமல் 2016 வரை அங்கேயே பணி செய்தது அவருடைய தன்னம்பிக்கைக்கு வாழ்த்து சொல்ல வைக்கிறது. இத்தனை கடினங்களையும் அனுபவித்துக்கொண்டு வேலைக்குச் சென்றது எதனால் ஒன்று பதவி உயர்விற்காக. ஆனால் இவரின் பதவி உயர்வு தடைசெய்யப்பட்டது. இவர் துறையில் இருந்த ஊழலை வெளிப்படுத்தியதால் .

இரண்டாவது காரணம் பணியில் இருபதாண்டுகள் நிறைவு செய்தால் ஓய்வூதியம் வரும் என்றதாலும். ஆனால் நடந்த நிகழ்வு ஒன்று அவரை பணியில் இருந்து விருப்ப ஓய்வு எடுக்க வைத்தது. எல்லோரும் ஆடை உடைத்துவது உடலை மறைக்கத்தான். ஆனால் சில வன்மம ;மிகுந்த ஆண்கள் பெண்களின் ஆடை எப்போது விலகும் அதனை பார்த்து ரசிக்கலாம் என்பதில்தான் இருக்கும். இவருக்கும் இதுபோன்ற ஒரு நிகழ்வு பணிபுரிந்து திரும்பும்பொழுது இவரை அறியாமல் உறக்கத்தில் இருந்தவேளையில் நடந்துள்ளது. உறக்கத்தில் இருந்து விழித்து அதனை தட்டிக்கேட்கும் நிலையில் அவர் இல்லை. தன்னை படம் எடுப்பதை உணரமுடிந்துள்ளது.

30.1.2016 இல் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார். தான் பதவி விலகிய நாள் 311 பகா எண் என்கிறார். இதனை எப்படித் திருப்பிப் போட்டாலும் அதாவது 311, 113, 131. இவர் வேலையை விடும் முடிவை எடுத்ததால் இவரின் எழுத்துப் பணி இன்றும் தொடர்கிறது. பல விருதுகளை பெற்றுள்ளார். இவரின் மற்ற புத்தகங்களை படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இயல்பாகவே ஏற்படுகிறது. வாழ்க எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ்

கட்டுரையாளர்: கயல்விழி, சென்னை