அரசியல் தமிழ்நாடு

விஜய் எழுப்பும் கேள்வியும்… நீட் தேர்வு நாடகமும்

  • January 11, 2025
  • 0

அரசியலில் வீட்டிலிருந்தே வேலை செய்வது என்ற பாணியை பின்பற்றி வருகிறார் என்று விமர்சனம் வைக்கப்பட்ட தவெக தலைவர் விஜய், அண்மைக்காலமாக அறிக்கைகள் மூலமாக எழுப்பும் கேள்விகள் கவனிக்க வைக்கும்படியாக அமைகின்றன.

Share:
விஜய் எழுப்பும் கேள்வியும்… நீட் தேர்வு நாடகமும்

அரசியலில் வீட்டிலிருந்தே வேலை செய்வது என்ற பாணியை பின்பற்றி வருகிறார் என்று விமர்சனம் வைக்கப்பட்ட தவெக தலைவர் விஜய், அண்மைக்காலமாக அறிக்கைகள் மூலமாக எழுப்பும் கேள்விகள் கவனிக்க வைக்கும்படியாக அமைகின்றன.

அந்தவகையில் நீட் தேர்வு ரத்து தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அளித்த பதிலுக்கு எதிர்வினையாக, எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள குறிப்பும் கவனம் பெறும் விதமாக உள்ளது.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே,
சொந்த நாட்டிலே
நம் நாட்டிலே….

என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது.

தவெக தலைவர் விஜய் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?

எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை.” என்று தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கையில் திராவிட கட்சிகள் இரண்டையுமே குறிக்கும் விதமாக தமிழக ஆட்சியாளர்கள் என்று குறிப்பிட்டதன் மூலம் தன் வாக்கு வங்கிக்கான திரட்சி யாருக்கு எதிரானது என்பதை புரிந்து கொண்டு எழுதப்பட்ட அரசியல் ரீதியான விமர்சனம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும், அந்தக் கேள்வியின் நியாயம் கவனிக்க வேண்டியது.

நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசின் கையில் இல்லை அந்த அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் உள்ளது என்றால், தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கும்போது மூளையைக் கழற்றிவைத்திருந்தீர்களா என்று காட்டமாகவும் கேட்கலாம். என்ன சொன்னாலும் நம்புவோம் என்று எண்ணினீர்களா என அப்பாவித்தனமாகவும் கேட்கலாம். நீட் தேர்வு ரத்தை அடுத்த தேர்தல் வாக்குறுதிகள் பட்டியலிலும் வைப்பார்களே என்று எண்ணும்போது சிரிப்போடு வரும் சங்கடத்தை என்ன சொல்வது?

நீட் தேர்வை ரத்து ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று சொன்னபோது மொத்த இந்தியாவிலும் அரசியலமைப்பின் கவனிக்கத்தக்க மாற்றம் ஒன்றைக் கொண்டுவரும்படி பெரும்தீரப் போராட்டத்தை ஆட்சி பலத்துடன் திமுக செய்யப்போகிறது என்று நம்பிய சாமானிய திமுக அனுதாபிக்கு இந்த வார்த்தைகள் எவ்வளவு வலிக்கும் என்பதை முதல்வர் உணர்ந்தாரா என்பது தெரியவில்லை.

எத்தனை காலம்தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *