அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவி குழு மகளிர் நிலை தற்போது உயர்ந்துள்ளது என திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பயனாளிகள் முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த கண்காட்சியை இரண்டாம் நாளான இன்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். தொடர்ந்து மத்திய மாநில அரசு திட்டங்கள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கட்டுரை போட்டி, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை அவர் வழங்கினார்.
பின்னர் பேசிய அவர்…
மத்திய மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் அதன் பயன்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் எடுத்துள்ள இந்த முயற்சி நல்ல முயற்சியாகவும். அரசின் ஒவ்வொரு துறையிலும் பல திட்டங்கள் மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் உள்ளன.
இதனை மக்கள் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகள் அணுகி கேட்பதை விட இது போன்ற கண்காட்சிகளை பார்வையிடுவது மூலமாக விழிப்புணர்வு அடைய முடியும்,
கல்லூரி மாணவர்களுக்கு என்ன உதவி செய்கிறார்கள் கிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் என்ன உதவிகளை பெறுகிறார்கள் என்பது இந்த கண்காட்சியில் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக போதை இல்லாத நாட்டை உருவாக்குவதற்காக இந்த கண்காட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே போதை ஒழிப்பதில் நாம் அவருடைய பங்கு என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவர்…
மகளிர் சுய உதவி குழு பெண்கள் வங்கிகளில் வாங்கக்கூடிய கடனை சரியாக திருப்பி செலுத்துவதன் மூலமாக வங்கிகள் மீண்டும் கடன் உதவிகளை வணங்குகிறது இதன் மூலமாக மகளிர் நிலை தற்போது உயர்ந்துள்ளது.
கிராமங்களில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வி பி ராம்ஜி திட்டத்தில் வேலை நாட்களை 125 நாட்களாக உயர்த்தி உள்ள கிராம மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இந்த கண்காட்சி மற்றும் இந்த முகாமில் கலந்து கொள்ள கூடியவர்கள் அனைவரும் அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு அனைவருக்கும் எடுத்துக் கூற வேண்டும்.
இந்த நாடு எல்லா வகையிலும் உயர வேண்டும் என்ற வகையில் இது போன்ற விழிப்புணர்வு முகாமை ஒன்றிய மக்கள் தொடர்பாக துறையினர் நடத்தி வருகின்றனர். இந்த முகாமில் கலந்து கொண்டவர்கள் உங்கள் கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரிடமும் அரசின் திட்டங்கள் அதன் பயன்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் ஒன்றிய, மாநில அரசுகளின் திட்டங்கள், பெண்கள் கல்லூரி மாணவிகள் இணையதளத்தை பயன்படுத்தும் போது பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் காயல்பட்டணம் வ.வூ பெண்கள் கல்லூரி, பிறை குடியிருப்பு சிவந்தி பெண்கள் கல்லூரி மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.