நாமக்கல் மாவட்டத்தில், அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகள், குடீநீர் பிரச்சினைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம், மாநில வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகள் பேரூராட்சி பகுதியில் ஆகியவற்றில் முறையாக தண்ணீர் வழங்கிட வேண்டும் என்றும், பருவ மழைக்கு ஏற்றபடி முன்னேற்பாடு பணிகள் செய்து குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில் :-
மேட்டூர் அணையில் தண்ணீர் குறைந்து வரும் நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கப்பதற்காக ஆய்வு கூட்டம் நடத்தி உள்ளோம், வரும் நாட்களில் காலநிலை மாறி மழை பெய்யும். நல்லதே நினைப்போம் கண்டிப்பாக மழை வரும் மேலும் தனக்கு எல் நினோ பாதிப்பு குறித்து சையிண்டிபிக்கா எதுவும் தெரியாது.
பத்திர பதிவு அலுவகலத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பதிவிறக்கம் செய்யும் போது ஆவணங்கள் அசல் வடிவில் இல்லாமல் நகல் வடிவில் உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டு குறித்து கேள்விக்கு…
இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் ஆன்லைனில் அவ்வாறு தான் வரும் அதுகுறித்து அலுவலர்களிடம் விசாரிப்பதாகவும் தெரிவித்தார் மேலும் திமுக – தவெகவும் ஒரே அணியில் இணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டுமேன விசிக தலைவர் திருமாவளவன் பேசியது குறித்து கேட்ட கேள்விக்கு.. அரசியல் ரீதியான எந்த கேள்வியும் கேட்க கூடாது என பேட்டி அளித்தார்.