16/10/2026
தமிழ்நாடு

ஒவ்வொரு கட்சி இடம் பிச்சை எடுத்து தான் ஆட்சியை பிடித்து உள்ளார் விஜய் – முன்னாள் அமைச்சர் S.P சண்முகநாதன்

  • July 11, 2026
  • 0

வெளிநாட்டில் தான் வாங்கிய காருக்கு அரசுக்கு வரி செலுத்தாமல் நீதிமன்றம் சென்றவர் விஜய் தான் தீய சக்தி – 2026 தேர்தலில் த.வெ.க முழு வெற்றி பெறவில்லை ஒவ்வொரு கட்சி இடம் பிச்சை எடுத்து தான் ஆட்சியை பிடித்து

ஒவ்வொரு கட்சி இடம் பிச்சை எடுத்து தான் ஆட்சியை பிடித்து உள்ளார் விஜய் – முன்னாள் அமைச்சர் S.P சண்முகநாதன்

வெளிநாட்டில் தான் வாங்கிய காருக்கு அரசுக்கு வரி செலுத்தாமல் நீதிமன்றம் சென்றவர் விஜய் தான் தீய சக்தி – 2026 தேர்தலில் த.வெ.க முழு வெற்றி பெறவில்லை ஒவ்வொரு கட்சி இடம் பிச்சை எடுத்து தான் ஆட்சியை பிடித்து உள்ளனர்.என கோவில்பட்டி அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் S.P சண்முகநாதன் பேட்டி

சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் 316வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழா முன்னிட்டு அதிமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன், சின்னப்பன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

அதிமுக முன்னாள் அமைச்சர் S.P சண்முகநாதன் செய்தியாளர் சந்திப்பு…

திமுக அதிமுக கூட்டுக்கு களவாணி என முதல்வர் விஜய் பேச்சுக்கு
தீய சக்தி கூட்டுக் களவாணி எல்லாமே விஜய் தான் எல்லா வற்றிக்கும் சொந்தகரார், வெளிநாட்டில் தான் வாங்கிய காருக்கு அரசுக்கு வரி செலுத்தாமல் நீதிமன்றம் சென்றவர் விஜய் தான் தீய சக்தி. த.வெ.க ஆட்சியில் அரசு அலுவலங்களில் லஞ்சம் வாங்கபடுகிறது.

தேர்தலில் பயந்து தான் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்
அரசியல் நாகரீகம் தெரியாமல் மேடையில் பேசி வருகிறார். அதிமுக தொண்டன் யாரும் கட்சியை விட்டு போகவில்லை அதிமுகவில் இருந்து மூடை மூடையாய் பணம் சம்பாதித்த இரண்டு விஜயபாஸ்கர் தான் த.வெ.கவில் போய் சேர்ந்து உள்ளனர்.

2026 தேர்தலில் த.வெ.க முழு வெற்றி பெறவில்லை ஒவ்வொரு கட்சி இடம் பிச்சை எடுத்து தான் ஆட்சியை பிடித்து உள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களால் தேர்வு செய்யபட்டவர்.

விஜயபாஸ்கர் பொது செயலாளர் ஆக வர வேண்டும் என எண்ணினார் முடியவில்லை அதனால் கட்சி மாறிவிட்டார். ஏரல் வாரச்சந்தையில் குத்தகை விடுவதில் பங்கு வேண்டுமென த.வெ.க எம்எல்ஏ சரவணன் அடாவடி செய்ததாகவும்,அதனை அனைவரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவித்தார்.