15/10/2026
தமிழ்நாடு

விஜய் அரசுக்கு காலம் தர வேண்டும் – துணை குடியரசுத் தலைவர்

  • July 22, 2026
  • 0

தமிழ்நாட்டில் உள்ள புதிய அரசுக்கு காலம் தர வேண்டும் -துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி…. கோவை வந்த துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு.. இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்,

விஜய் அரசுக்கு காலம் தர வேண்டும் – துணை குடியரசுத் தலைவர்

தமிழ்நாட்டில் உள்ள புதிய அரசுக்கு காலம் தர வேண்டும் -துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி….

கோவை வந்த துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு..

இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் தனி விமானம் மூலம் கோவை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அர்லேகர், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார், மாநகர காவல் ஆணையாளர் கண்ணன் உள்ளிட்டோர் துணை குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணைக் குடியரசுத் தலைவர்,

பல ஆண்டு காலமாக நமது தாய்மார்களுக்கு பிரசவ வேதனை என்று சொன்னால் அவர்களுக்கு முழுமையான வைத்தியத்தை தந்த முதல் மருத்துவமனை குப்புசாமி மருத்துவமனை அதன் நர்சங் கல்லூரி திறப்பிற்கு வருகை புரிந்துள்ளேன்.

கோவைக்கு வருவது என்றாலும் தமிழகத்திற்கு வருவது என்றாலும் அது ஒரு தனி மகிழ்ச்சி தனி பூறிப்பு.

டெல்லி மாணவர்கள் போராட்டம் குறித்தான கேள்விக்கு அது அரசியல் கேள்வி அதற்குரிய பதிலை அரசியல் தலைவர்கள் கொடுப்பார்கள்.

மாணவர்கள் எப்போதும் நாட்டின் ஒற்றுமையை ஊக்குவிக்கிறார்கள்.

மாணவர்கள் எப்பொழுதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தேசத்தின் பாதுகாப்பை பாதுகாப்பதற்கு ஒற்றுமையாக இருக்க வேண்டும் ஒற்றுமையாக இருந்தால் தான் உலக அரங்கில் நம்முடைய குரல் எழும்

தமிழ்நாட்டில் உள்ள புதிய அரசுக்கு காலம் தர வேண்டும் என்பதுதான் உங்களுடைய விருப்பமும் என்னுடைய விருப்பமும் கூட என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

அதன்பின்னர், திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அருள்மிகு லிங்கேஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளார்.

கோவை மற்றும் திருப்பூரில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறைவு செய்த பின்னர், இரவு 10 மணியளவில் கோவை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

துணை குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி கோவை விமான நிலையம் மற்றும் நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.